பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - விவாகமானவர்களுக்கு - பெற்றல் மட்டுமே பூர்த்தியாகும். குழந்தை யில்லாத காலதது, "குழந்தையில்லையே, வேண்டுமே!’ என்று சதா கவலைப்பட்டவர்கள், குழந்தைகள் பிறந்தபின் அவர்கள் நல்லவர்களாக வாய்க்காவிட்டால், ஐயோ இந்தக் குழந் தைகளை ஏன் பெற்ருேம்?' என்று வருந்துவதை யாவரும் அறிவர். நல்ல_ குழந்தைகள் பிறந்தால் மட்டுமே, 'குழந்தை பெற்ருேம்’ என்று சந்தோஷம் அடைகின் ருேம். இல்லையேல் சதா கால்மும் சங்கடந்தான், சிந்தனை தான், கவலைதான். - பெறும் பேறு யாது? உலகத்தில் ஜனங்கள் எதை எதையோ சம்பத்து, ஆச் வரியம், பேறு என்று பலபடப் பேசுகிருர்கள், அவைக அடைய அரும்பாடு படுகிருர்கள், அவற்றைத் தேடுவதி லேயே ஈடுபட்டு உழல்கிருர்கள். ஆனல் மனிதன் தேடு .பவையெல்லாம் மன்தன் பெறவேண்டிய பேறு ஆகிவிட மாட்டாது. மனிதன் பெறவேண்டிய பேறுகளிலும் ஒன்றுதான் உயர்ந்ததாகும். அதற்கு இணையாக ஒன்றை யும் கூறமுடியாது. அது எது ? . 'பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற’ என்று நாயனர் பதில் கூறுகிருர். நல்ல குழந்தைகளைப் பெறுவதே உலகில் உயர்ந்த பேறு என்று உறுதி கூறு கின்ருர், குழந்தை பிறந்துவிட்டால் வீடு முழுவதும் சந்தோ வடிம். குடும்பம் முழுவதும் குதுகலம்,_நண்பர் உறவினர் கள் சந்தோஷச் செய்தி விசாரிக்க வருகிருர்கள். சந்தனம், தாம்பூலம், சர்க்கரை, பழம் வழங்கப்படுகின்றன. புத்திர புத்திரிகள் சம்பத்து அல்லவா? அதனல் சந்தோஷத்துக்கு அளவில்லை. புத்திரன் புத்திரி பெற்றுவிட்டால் உடனே சம்பத்து கிடைத்துவிட்டதாகக் கூறமுடியுமா? சற்புத் திரன் சற்புத்திரி பிறந்தால் அல்லவோ சம்பத்துக் கிடைத்துவிட்டதாகச் சந்தோஷிக்கலாம். மக்கள் "பேறு' ஆகார்; நன்மக்களே "பேறு ஆவார்.