பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - விவாகமானவர்களுக்கு - பதால்ை 9 ஆயிரம் குழந்தைகள்தான் இறக்கும். பாக்கி -36 ஆயிரம் குழந்தைகள் அநாவசியமாகப் பிறந்து அநா வசியமாகத்தான்ே இறந்துவிடுகின்றன? இவ்விதம் ஏராள மாகப் பிறந்து றப்பதால் யாருக்கு என்ன லாபம்? பெற்ற குடும்பத்துக்கும் பிறந்த _தேசத்துக்கும் பல விதத் திலும் நஷ்டம் என்பதில் சந்தேக முண்டோ ஒர் ஆயிர மன்று, இரண்டு ஆயிரமன்று, 36 ஆயிரம் குடும்பங்களில் வீண் சிரமம், வீண் செலவு, வீண் அழுகை ! நமது சென்னை மாகாணத்தில் வருஷந்தோறும் மக் கட் பயிர் விளைவித்த பாபத்துக்காக மரணம் எய்தும் தாய்மார் எத்தனை பேர்? 30 ஆயிரம் பேர், இந்தத் தொகைக்கு அதிகமாயிருக்குமே தவிர, குறைவாயிராது என்று சர்க்கார் அறிக்கைகளே கூறுகின்றன். இந்த 30 ஆயிரம் பெண்கள் யார்? இளஞ் சிறுமிகளுமல்லர், வய தான பெண்களுமல்லர். நல்ல வாலிப தசையிலுள்ள நடு வயதினர். குடும்பப் பாரத்தை நடத்தும் பொறுப்பினர். பெரும்பாலோர் தொழில் செய்து வனம் தேடுபவர். அவர்களில் அநேகருக்கு ஏற்கனவே இரண்டு முன்று குழந் தைகள் இருப்பதுமுண்டு. தாய் இறந்த பின் அந்தச் சிறு குழந்தைகளின் கதி என்ன? கணவன் மறுதாரம் பெற லாம். ஆனல் மறுதாரம் மக்களுக்கு மறுதாயாய் வாய்ப்ப துண்டோ? இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை என்பது உண்மைதான். ஆனால் இல்லாள் இறந்து விட் டால், அதுவும் இவ்விதம் அநியாயமாய், அநாவசியமாய், அகாலமாய் றந்துவிட்டால் யாது உண்டு? ப்படி நம் மாகாணத்தில் மட்டுமே ஆண்டுதோறும் 30 ஆயிரம் குடும் பங்கள் பாழாய்ப் போக விடலாமா? நம் மாகாணத்தில் சுமார் 30 ஆயிரம் கிராமங்கள் இருக்கலாம். வீட்டுக்கு ஒரு இளைஞனைப் பலிகேட்ட இராட்சதர்களைப் பற்றி இதிகா சிங்களில் படித்திருக்கிருேம். ஆனல் அந்த அரக்கர்கள் அவ்விதம் கேட்டு அதிகநாள் வாழ்ந்ததில்லை. ப்பொழுது நம் மாகாணத்தில் கிராமத்துக்கு ஒரு மங்கை தம் 'பிர சவ தேவதை பலிவாங்கி வருகிறதே! பலிவாங்க ஆரம் பித்துப் பல வருஷங்களும் ஆய்விட்டனவே! இதற்கு ஒரு விமோசனம் தேடவேண்டாமா? - சில வருஷங்களுக்கு முன் சென்னை சர்க்கார் பிரசவ ஆஸ்பத்திரியில் பிரதம வைத்தியராயிருந்தவரும் சென்னை சர்வ கலாசாலையில் உப அத்யட்சராயிருப்பவருமான