பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - விவாகமானவர்களுக்கு - நாட்களில் பிரமசரியம் என்று ஏற்படுத்திக் கொண்டால் போதும், குழந்தைகள் உற்பத்தியாகா, மண வாழ்க்கையின் இன்பத்தையும் பெறலாம், மக்களைப் பெருதுமிருக்கலாம் என்று கூறுவர். ஆனல் அப்படிக் கருத்தரியாத நாட்கள் எவை என்று கேட்டால், சிலர் மாதவிடாய் நின்றதும் கருத்தரிக்கும் என்றும், சிலர் இரண்டு மாதவிடாய்களுக்கு மிடையிலுள்ள நாட்களிலேயே குழந்தை உற்பத்தியாகின்றது என்றும் ஏனைய நாட்களில் கருத்தரிப்பதில்லை என்றும் கூறுகின்றனர். பழைய நூல்களைப் பார்த்தால் யூதர்கள் மாத விடாய்க்கு முந்திய நான்கு நாட்களிலுமே கர்ப்பம் உண் டாகும் என்று எண்ணினர்கள். ஆயினும் அவர்கள் மாத விடாய் கண்டபின் 12 நாளும் சம்போகம் செய்யத்தகாத நாட்கள் என்று கண்டிப்பாய் விதித்திருந்தனர். மநுதர்ம சாஸ்திரமோ மாதவிடாய் உண்டான நாள் முதல் நான்கு நாட்களும் அசுத்தம், மறு நான்கு நாட்களும் நல்ல குழ்ந்தைகள் பிறவா, 9-வது நாளிலிருந்து 20-வது நாள் வரை நல்ல குழந்தைகள் உற்பத்தியாகும், அடுத்த எட்டு நாட்களும் கருத்தரியாத நாட்கள் என்று கூறுகின்றது. தற்காலத்தில் சம்போகம் சம்பந்தமாக எழுந்துள்ள ஆராய்ச்சி நூல்களைப் பார்த்தால், கர்ப்பம் உண்டாகாத நாட்கள் இவை என்று ஒன்று கூறுவதுபோலவே மற்ருென்று கூறக்காணுேம்._ கர்ப்பத் தடை நூல்கள் எழுதியுள்ள்வர் கள்வில் மிகச் சிறந்தவர்கள் ஹார்னிபுரூக் அம்மையாரும் ஸ்டோப்ஸ் அம்மையாரும் ஆவர். ஹார்னிபுரூக் அம்மை யார்மாதவிடாய்க்கு முந்திய ஒரு வாரத்தையே கர்ப்பமுண் டாகாத நாட்கள் என்று கூறப்படுவதாகச் சொல்லுகிரு.ர். ஆனல் ஸ்டோப்ஸ்-அம்மையார் தாம் எழுதிய ஒவ் வொரு நூலிலும் ஒவ்வொரு விதமாக்க் கூறுகிரு.ர். ஒரு நூலில் மாதவிடாய் கண்டநாலாவது நாளிலிருந்து இரண்டு வாரம்வரை கர்ப்பம் உண்டாகாது என்றும், ஒரு நூலில்