பக்கம்:வீடும் விளக்கும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடும் விளக்கும் தோற்றுவாய் பழங்கால மனிதன் வரலாறு: பண்டைக் காலத்திலிருந்து மனிதரின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து பார்த்து வருவோமானால் நமக்குப் பெரியதொரு வியப்பு உண்டாகாமற் போகாது. அக்கால மனிதனுக்கும் இக்கால மனிதனுக்கும் எவ்வளவோ வேற்றுமை உண்டு. அக்கால மனிதன் இயற்கையாய் விளைந்த காய், கனி முதலியவற்றை உண்டுவந்தான். அவ்வுணவோடு விட்டானா? சில சமயங்களில் விலங்கு, பறவை முதலியவற்றை வேட்டையாடியும் உண்ணத் தொடங்கினான். அங்ங்னம் உணவுப் பொருள்களைத் தேடித் திரிவதை விட வேறு வேலை அவனுக்குக் கிடையாது. வேறு வேலை செய்யத்தான் தெரியுமா? அதுதான் இல்லை. அடுத்தபடியாகத் தூங்கவே தெரியும். அவனுக்கென வீடு இல்லை. அதனால் அவன் வெறுந்தரையில் உறங்கினானா? இல்லை. விலங்குகள் கொன்றுவிடும் எனற அச்சத்தால் இரவானதும் மரத்தின்மேலும், மரப்பொந்துகளிலும், மலைக்குகைகளிலும் உறங்கி வந்தான்.