பக்கம்:வீடும் விளக்கும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. விடும் விளக்கும் நாகரிக வளர்ச்சி: இப்படி உண்பதையும் உறங்குவதையும் தவிர வேறொன்றையும் அறியாத அவன் இதே நிலையில் இருந்து விடவில்லை. நாளாக நாளாகச் சிறிது நாகரிகமும் அடையத் தலைப்பட்டான். நாடொறும் உணவைத் தேடி அலைவது அவனுக்கு அலுப்பாய்த் தோன்றியது. அதனால் எதிர்காலத்திற்கும் உதவும் படியாக உணவைச் சிறிது சேமித்து வைத்துக் கொள்ளவும் கற்றுக்கொண்டான். அதற்காக நிலங் களை உழுதான்; விதை விதைத்தான்; விளைந்ததும் அறுத்தான். அறுத்தவற்றைக் கொட்டி வைக்க வேண்டுமே. எங்கே கொட்டி வைப்பது? பாதுகாப்பாகத் தனக்கென ஓர் இடமும் இல்லை யல்லவா? ஆதலின் தனக்கென வீடு கட்டிக் கொள்ளவும் கற்றுக் கொண்டான். முதலில் கால்களை கட்டுத் தழைகளையும் மட்டைகளையும் பரப்பினான். பின்பு மண்சுவர் வைத்து மேலே கூரை வேய்ந்தான். பின்பு மண்ணைச் சுட்டுக் கல்லும் ஓடும் செய்து அவற்றால் வீடு கட்டினான். இப்படி நாளாக நாளாகப் போதிய நாகரிகம் அடையத் தொடங்கினான். பெரிய பெரிய மாட மாளிகைகள் கட்டக் கற்றுக் கொண்டான். சிறந்த உணவுப் பொருள்களைச் சிறந்த முறையில் பயிர் செய்யவும் கற்றான். மேலும் மேலும் அறிவு பலதுறையிலும் வளரத் தலைப்பட்டது. அதனால் நாகரிக உணர்ச்சி ஏற்பட்டது. ஏற்படவே இக்காலத்திருக்கும் நெசவு முதலான பலவகைத் தொழில்களையும் செய்யப் படிப்படியாகக் கற்றுக்