பக்கம்:வீடும் விளக்கும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 15 கொண்டான். இக்காலம் நாகரிகத்தின் உச்சியில் கிற்கின்றான். இதுதான் பழங்கால மனிதன் வரலாறு. வீடு: ஆகவே, மனிதன் தூங்கி விழித்ததிலிருந்து திரும்பவும் தூங்கும் வரையிலும் உணவு உடை முதலிய வற்றுக்காக வெளியில் சென்று பலவிதமான தொழில் களையும் செய்கின்றான்; பின்பு உண்ணவும் உறங்கவும் ஓர் இடத்தைக் கைக்கொண்டு ஒய்வு எடுத்துக்கொள் கின்றான் என உணர்கின்றோம். அந்த இடத்திற்குத் தான் தமிழர்கள் வீடு' எனப் பெயரிட்டுள்ளார்கள். மனிதன் மட்டுமா? ஐந்தறிவு படைத்த பறவைகளும் உணவுக்காக உழைக்கின்றன. பின்பு அவ்வலுப்பு நீங்கி இளைப்பாறக் கூடு கட்டிக்கொண்டு வாழ்கின்றன. அவற்றினும் அறிவு குறைந்த பாம்பு, நண்டு முதலியவைகளும் வளையில் வாழ்கின்றன. மிகச்சிறிய எறும்பும் அப்படியே. இவைகளே இப்படி என்றால் ஆறறிவு படைத்த மனிதன் வீடு கட்டி வாழத் தெரியாமல் இருப்பானா? இங்ங்ணம் எல்லா உயிர்களின் செயலையும் நோக்குங்கால் வீடு என்பது இன்பம் அடைதற்குரிய இடம் என்பது நன்கு விளங்குகின்ற தல்லவா? இல்லம், இல், மனை, அகம் முதலிய சொற்கட் கும் வீடு என்பதே பொருள். வீடு என்பதற்கு விட்டது என்பது நேர்பொருளாம். பட்டதைப் பாடு என்றாற்போல் விட்டதை வீடு என்றார்கள். எல்லாத் துன்பத்தையும் விட்டு உடம்பைத் தங்கவிட்ட இடம் வீடாம். இப்போதும் வெளியில் சென்று வேலையால்