பக்கம்:வீடும் விளக்கும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 17 என ஒளவைப் பிராட்டியார் கூறியுள்ளதும் இத்தகைய பெண்களை நோக்கித்தான்போலும்? கணவன் மனைவி இருவருள் ஒருவர் மிஞ்சியவராயிருப்பின் மற்றொரு வராவது அடங்கியவராய் இருக்கவேண்டும். அப்போது தான் சிறிதாயினும் குடும்பம் உருத்தேறும். இருவரும் இருபெரும் பேய்களாக இருப்பரேயாயின் அவ்வீட்டின் கிலை கினைப்போர்க்கும் அச்சம் தரும் என்பதில் ஐயமுண்டோ? இவர்களைக் குளிக்கப் போய்ச் சேறு பூசிக்கொண்டவர்கட்கு ஒப்பாகத்தான் சொல்ல வேண்டும். இங்ங்ணமின்றி வீட்டை இன்ப மயமாக்கு வதே அறிவுடைமையாம். வீடு கட்டி வாழ்வதின் நோக்கமும் அதுவே என்றால் தவறொன்றுமில்லை. வீட்டின் பெருமை: தமிழர்கள் நுட்பமான அறிவு பெற்றவர்கள் என்பதற்கு இங்குத் தக்கதொரு சான்று பகர முடியும். சிற்றின்பம் நுகர்வதற்குரிய இந்த இடத்திற்கு வீடு எனப்பெயர் வைத்திருப்பது போலவே, பேரின்பம் நுகர்வதற்குரிய மோட் சத்திற்கும் வீடு எனப்பெயர் வைத்துள்ளார்கள். இதனைக் கூர்ந்து நோக்கின் தமிழர்களின் அறிவு நுட்பத்தை எவரால்தாம் புகழா திருக்கமுடியும்? மோட்சமென்றாலும் முத்தியென்றாலும் விடென்றாலும் விடுபடுதல் என்னும் ஒரே பொருள் தான். துன்பம் தரும் உலகக் கட்டுக்களையெல்லாம் விட்டு, உயிரை இன்பமாகத் தங்கவிட்ட இடம் மோட்ச வீடாம். சிறந்ததெனப்படும் பேரின் பத்திற் குரிய (மோட் ச) வீட்டை அடைவதற்காக முற்றத்