பக்கம்:வீடும் விளக்கும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 விடும் விளக்கும் துறந்த முனிவனாகித்தான் தீரவேண்டும் என்பதில்லை. காட்டில் திரியவும் வேண்டுமோ? காற்றைத்தான் உண்ணவும் வேண்டுமோ? அல்லது ஒடெடுத்துப் பிச்சையேற்று உழலத்தான் வேண்டுமோ? ஒன்றுமே வேண்டாவே! சிற்றின்பத்திற்குரிய குடும்ப வீட்டில் மனைவி மக்களுடன் இருந்தபடியேயும் பேரின்ப (மோட்ச) வீட்டை அடைய முடியுமென்றால் அதனை மறுக்க வல்லுநர் யாவருளர்? இது சிறந்த உண்மை யாகும். இதனை நம் பட்டினத்தார், 'காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கங்தை சுற்றி ஒடே எடுத்தென்ன உள்ளன் பிலாதவர் ஒங்குவிண்ணோர் நாடேய் இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால் வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே' என அழுத்தமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார். இப்பாட்டின் கடைசி அடிக்கு பெண்களுடன் குடும்ப வீட்டில் இருந்தபடியே (மோட் ச) வீட்டிற்குச் செல்ல முடியும் என்பது பொருள். மேலும் இவ்வடிக்கு, (மோட்ச) வீட்டில் நுகரக்கூடிய பேரின்பத்தையும் குடும்ப வீட்டில் இருந்து கொண்டே நுகர முடியும் என மற்றொரு பொருளும் கூறிவிடலாம். இதற்கு மெய்யன்பு வேண்டும். சமய நூலார் சீவன்முத்தர்' எனக் கூறுவதும் இங்கிலையில் உள்ளவர்களை யன்றோ? முற்றத்துறந்த முனிவரும் நுகர்ந்து கண்ட