பக்கம்:வீடும் விளக்கும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 19 வரும் (அநுபவசாலியும்) ஆகிய பட்டினத்தடிகளே இங்ங்ணம் கூறியுள்ளனரென்றால் நாம் இங்கு இன்னும் வேறு கூறவும் வேண்டுமோ? மனைவி மக்கள் சூழ வீட்டில் இருந்துகொண்டே செய்யப்படும் நெசவுத் தொழில் முதலிய கைத்தொழில்கள் சிறந்ததெனக் கொண்டாடப் பெறுவதும் இதுபற்றியே யென்றால் தவறொன்றும் இலது. செய்யுங் தொழிலைச் சீர்தூக்கிப் பார்க்கின், நெய்யுங் தொழிற்கு கிகரில்லை' எனும் முதுமொழி எழுந்ததும் இதனால் தான் போலும்! இவ்வித இன்பத்திற்குரிய வீட்டின் பெருமையே பெருமை! புகழே புகழ்! விளக்கின் தேவை: வீடென்றால் அதனை விளக்க நல்ல விளக்கு வேண்டாவா? இருட்டால் மறைக்கப்படாமல் பொருள் களை விளக்குங் காரணத்தினாலேயே விளக்கிற்கு விளக்கு எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. பறவை களும் கூட்டில் விளக்கு வைத்திருந்ததாக இலக்கியங் களில் காணக் கிடக்கின்றது. வேட அரசன் வள்ளியைத் தினைப் புனத்திற்குக் காவல் வைத்த செயல், பறவையானது பாம்பால் கக்கப் பட்டுக் காட்டில் கிடந்த மாணிக்கத்தைக் கொண்டுவந்து கூட்டிலுள்ள இருளையோட்டுதற்கு வைத்த செயலோடு ஒத்துளது என்னும் கருத்தில். 'காட்டில் எளிதுற்ற கடவுள் மணியைக் கொணர்ந்து கூட்டில் இருளோட்டக் குருகுய்த்த வாறன்றோ,'