பக்கம்:வீடும் விளக்கும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o, சுந்தர சண்முகனார் 245 கொண்டுவர வேண்டும். இவரோ உணவுக் கடையில் உண்டு வருகின்றார். அந்தோ என்ன செய்வார்! கதையைத் திறந்து சொல்லத் தொடங்கி விடுகின்றார். 'இப்போது வீட்டில்என் மனைவி இல்லை. அதனால்தான் வீடு இப்படித் தூய்மையற்றுக் கிடக்கின்றது. என்ன சிறிது தண்ணீருக்கும் வழியில்லையல்லவா? அப்பப்பா! பெண்கள் இல்லாத விடும் ஒரு வீடா? எனக்கென்னவோ பிடிக்கவில்லை. ஒரு நாள் போவதும் ஒரு மலையாய்த் தோன்று கின்றது. யான் ஓர் உணவுக் கடையில் (ஒட்டல்) உண்டு வருகின்றேன். என்ன உணவு அது? நூம்மைக் கண்டதும் எனக்கே வெட்கமாய்ப் போய் விட்டது' என்று முணுமுணுக்கின்றார். வந்தவரும், "ஆமாம் உண்மைதான்; பெண்கள் இல்லாமல் என்ன காரியந்தான் நடக்கும்; பட்டால்தானே தெரியும்' என்று ஒத்துக்கு மத்தளம் அடிக்கத் தொடங்கி விடுகின்றார். சில விருத்தினர் நிலை: சில வீட்டிற்கு விருந்தாய்ப் போனவர்களின் கிலையை எண்ணினால் பெரியதோர் நகைப்புத் தோன்றாமற் போகாது. போனவரும் வீட்டுக்கார ரோடு சேர்ந்து சமையல் செய்ய வேண்டியதாய்விடும். வெளவால் வீட்டுக்குப் போனவரும் தலைகீழாய்த் தொங்க வேண்டும்' என்னும் பழமொழிதான் இருக்கவே இருக்கின்றதே. சில சமயம் விருந்தினர் கட்டமுது கொண்டுவந்தால் வீட்டுக்குரிய ஆடவரும் அதில் பங்கு