பக்கம்:வீடும் விளக்கும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 விடும் விளக்கும் போட்டுக்கொள்வதும் உண்டு. இவற்றையெல்லாம் என்னென்று எடுத்துரைப்பது? நற்பெண்டிரின் குறை: மேற்கூறிய நிகழ்ச்சிகளையெல்லாம் நாம் வாழ்க் கையில் பன்முறை பலவிடங்களில் கண்டேயிருப்போம். ஆனால், வீட்டில் நல்ல மாண்புமிக்க பெண்மணிகள் இருப்பார்களேயாயின், விருந்தினரை வறிதே அனுப்பவே மாட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். வந்தவர் ஒரு வேலையின் கிமித்த மாக உண்ணாமல் விரைந்து சென்றுவிட்டாலும், அது நற்பெண்டிருக்கு ஒரு பெருங்குறையாகவே தோன்றும். மனமிளகி உதவுங்குணம் ஆண்களைவிடப் பெண் கட்கே மிகவும் உண்டு. அவர்கள் தாய்மையின் இருப்பிடமன்றோ? இதற்கு எடுத்துக்காட்டாகப் பல வரலாறுகள் உள்ளன. கண்ணகியின் கற்புச்செயல்: கோவலன் மனைவி கண்ணகி, கற்புக் கணிகலம்.' செல்வப்பெண். அவளை வாழ்க்கையில் இன்பமின்றித் தவிக்கவிட்டான் கணவன். மாதவியை அடுத்திருந் தான். பின்பு தன் பிழையை கண்குணர்ந்தான். திரும்ப வும் கண்ணகியை அடைந்தான். பொருள் தேடும் விருப்பத்தால் ஒருவரும் அறியாமல் இரவில் அவளை அழைத்துக் கொண்டு மதுரைக்குச் சென்றான். ஆயர் பெண் மாதரி வீட்டில் தங்கினான். கண்ணகியை அருகில் அமரச் செய்தான். மன்னிப்புக் கேட்பவன்