பக்கம்:வீடும் விளக்கும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 47 போல் தன் குற்றங்களையெல்லாம் ஒப்புக்கொள்ள லானான். இரவில், கரடுமுரடான வழிகளில் கால் நோவ உடன் வந்த கண்ணகியே! உன் அன்பை என்னென்பேன்! உன் உள்ளம் அறியாமல் வாணாளை வீணாள் ஆக்கினேன். உனக்கும் இன்பம் அளித்தே னில்லை. துன்பக் கடலில் தோயச் செய்தேன். அவ்வமயம் உன் மனநிலை எத்தகையதா யிருந்ததோ! நீ எந்த நிலைமையில் இருந்தாயோ! ஆ கொடியேன்! என்ன செய்தேன்' என்றெல்லாம் பல கூறி அரற்றினான், பிதற்றினான், ஏங்கினான். - கேட்டாள் கண்ணகி, 'என் அருமைத் தலைவரே! இராவழி நடந்ததால் எனக்கொன்றும் அலுப்புத் தோன்றவில்லை. காரணம் நும்முடன் வந்தமையே. நும்மைப் பிரிந்து தனித்திருந்த காலமே இன்பமின்றிக் கழிந்தது. அவ்வமயம் பெருங்கவலை யொன்று என்னை மிகவும் தாக்கியது. நம் வீட்டிற்கு வந்த அறவோர்கட்கு ஒன்றும் அளித்தேனில்லை. செந்தண்மை பூண்ட அந்தணர்களை மகிழ்வித் தேனில்லை. துறவிகளைக் காத்தேனில்லை. விருந்தினர் களை எதிர்கொண்டு வரவேற்றேன் இல்லை. பெண் கட்குக் கிடைக்கக்கூடிய இந்த அரும்பெரும் வாய்ப்பு களையெல்லாம் இழந்து வருந்தினேன்' என்று அன்பு கனிய இன்மொழி புகன்றாள். இதனை, 'அறவோர்க் களித்தலும் அந்தணர் ஒம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை'