பக்கம்:வீடும் விளக்கும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 விடும் விளக்கும் என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் அழகு பெறப் பொறித்துக் காட்டியுள்ளார். கண்ணகி கோவலனிடத்தில், நூம்மைப் பிரிந்திருந்த காலத்தில் நல்ல உணவில்லை என்று மொழிந்தாளா? அல்லது உயர்ந்த ஆடை அணிகலன்கள் கிடைக்க வில்லை என்றுதான் இயம்பினாளா? இன்னும் வேறு பல நன்மைகளை அடைவதற்கில்லை யென்றுதான் ஏங்கினாளா? ஒன்றுமில்லையே. கணவனைப் பிரிந்து ஏழ்மையுற்ற சோர்வால், வீட்டிற்கு வந்தோர்க்குப் பணி செய்யமுடியாது போனதையே ஒரு பெருங் குறையாகவும் கவலையாகவும் குறிப்பிட்டுள்ளா ளல்லவா? இதைக் கூர்ந்து நோக்கின் உண்மை விளங்காமற் போகாது. அக்கண்ணகியின் மனப்பான்மை தான் என்னே! சீதையின் சீரிய நோக்கம்: இராமாயண வரலாற்றிலும் இதைப்போன்ற நிகழ்ச்சி யொன்றுள்ளது. இராமனும் சீதையும் அயோத்தியை விட்டனர். காட்டையடைந்தனர், குடிசையில் வாழ்க்கை நடத்தினர் சின்னாள். திடீரெனச் சீதை இராவணனால் சிறையெடுக்கப் பட்டாள். இராமன் காட்டில் தனித்து வருந்தலானான். இலங்கையில் இருக்கும் சீதையின் கவலைக்கோ ஓர் எல்லையில்லை. அவள் கவலை சென்றது எவ் விதத்தில் 'காட்டில் நாம் இருந்த குடிசைக்குப் பல துறவிகள் விருந்தாக வருவார்களே. அவர்கள் நிலை என்ன? அவர்க்குச் சமைத்துப் பரிமாறுபவர் யாவர்