பக்கம்:வீடும் விளக்கும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 49 என்பது புலப்படவில்லையே. நாம் அங்கிருந்து அவர்க்குத் தொண்டு செய்வதற்கும் இல்லையே. அவ் விருந்தினரைக் கண்டதும் உணவு முதலியவற்றால் மகிழ்வித்தற்கின்றி நம் கணவர் மனம் என்ன பாடு படுகின்றதோ' என்றெல்லாம் பல எண்ணிக் கவன்றாள். இதனை, 'விருந்து கண்டபோது என்னுறுமோஎன விம்மும்' என மிகவும் உருக்கமாக எடுத்துக் கூறியுள்ளார் கம்பர். பெண்டிர் திறமை: எனவே, கண்ணகியும் சீதையும் விருந்தோம்பாது போயினும் தம்மால் முடியாது போனமைக்கு வருந்தி யாவது இருப்பது மிகவும் போற்றிப் புகழ்தற்குரியதாம். சிறந்த பெண்களின் இலக்கணமும் இதுவே. தாங்கள் எவ்வளவு எளிய நிலையில் இருப்பினும் சரியே. தம்மை நாடி வந்தவர்களை உதறித் தள்ளாமல் மகிழ் விக்கும் மனப்பான்மை பெண்டிர்க்கும் இருந்தே தீர வேண்டும். எடுத்துக்காட்டாக ஒன்று நோக்குவோம். வீட்டில் ஒன்றும் இல்லை. உணவு தண்ணீரே. அதுவும் ஒரு நாளைக்கு ஒரு குடத்திற்கு மேல் மறு குடத்திற்கும் வழியில்லை. இந்நெருக்கடியான நேரத் தில் சுற்றத்தினர் வந்து சூழ்ந்துவிட்டனர். சுற்றம் என்றால் ஒருவரல்லர்; இருவரல்லர்; கடல்நீரும் போதாத அளவில் பலர் கூடிவிட்டனர். அவ்வமயத்தில் பெண்ணானவள் செய்ய வேண்டுவதென்ன? தன் முழுத் திறமையினையும் பயன்படுத்த வேண்டாவா? இனிய