பக்கம்:வீடும் விளக்கும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 விடும் விளக்கும் பேச்சாலும் செய்கையாலும் இயன்ற அளவு வந்தவர் களை நிறைவுபடுத்தி மகிழச் செய்யவேண்டும். வேறு விளக்கில்லாவிடினும் அவ்வீடே வந்தோர் கண்கட்கு விளக்கமாகக் காணப்படும். இதுபற்றி யன்றோ 'குடநீர்அட் டுண்ணும் இடுக்கட் பொழுதும் கடல்நீர் அறஉண்ணும் கேளிர் வரினும் கடனீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி மாதர் மனைமாட்சி யாள்' என நாலடியாரும் முழங்குகின்றது. இல்வாழ்க்கையின் நோக்கம்: இங்ங்ணம் வந்தோர்க்கு வழங்கிக்கொண்டேயிருந் தால் தம் குடும்பம் வளர்வதெப்படி? விரைவில் ந்ொடித்து விடாதா? என்ற கேள்வி எழுந்தே தீரும். குடும்பம் நொடித்துப் போவதற்குரிய பெருங்காரண மாக இதனைக் கூறுவது அவ்வளவு அறிவுடைமை யாகத் தோன்றவில்லை. அதற்கு ஆரவாரத்தாலுண் டான பல்வேறு காரணங்கள் இருக்கலாம். விருந் தோம்பல் என்றால் உள்ளதை மறைக்காது இயன்ற அளவு செய்யவேண்டும் என்பதே தவிர வேறன்று, வீடென ஒன்று கொண்டு, அதில் கணவன் மனைவி யென இருவர் கூடி இல்வாழ்க்கை நடாத்துவது, இங்ங்ணம் உலகத்திற்கு உதவி உழைப்பதற்குத்தானே. இல்வாழ்க்கையின் நோக்கமும் இதுவேயெனின் மிகை யாகுமோ?