பக்கம்:வீடும் விளக்கும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 51 'இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட் என்பது திருக்குறள் அல்லவா? விருந்தோம்பற் பெருமை: தேவாமிர்தம் ஆனாலும் விருந்தின்றி உண்ண லாகாது. நாடோறும் விருந்தோம்புவோர் வாழ்க்கை சிறிதும் கெடாது. மேன்மேலும் வளரும். அவ்வீட்டில் திருமகள் மனமகிழ்ந்து தங்குவாள். அவர்கள் அடுத்த பிறவியில் தேவர்க்கு விருந்தாகத் தெய்வ உலகம் செல்வார்கள். விருந்தோம்பாதோர் எவ்வளவு பெருஞ் செல்வராய் இருப்பினும் ஏழையராகவே கருதப்பட்டு இழிக்கப்படுவார்கள். இவ்விதமாக விருந்தோம்பலின் கட்டாயத்தையும் பெருமைதனையும் பலபட எடுத்தியம்பி யுள்ளார் திருவள்ளுவர். இவற்றைத் திருக்குறளிலுள்ள விருந்தோம்பல்' என்னும் பகுதியில் பரக்கக் காணலாம். சில பெண்டிர் உயர்நிலை: சில வீடுகளில் ஆண்கள் வெளியூருக்குச் சென்றிருப்பினும் பெண்கள் தம் தகுதிக்கேற்ப வந்த வர்களை மகிழ்விப்பதுண்டு. இதனைப் புறநானூற்றில் பொறிக்கப்பட்டுள்ள வரலாறொன்று நன்கு தெளிவிக் கின்றது. பண்டைக்காலம். இரு பேரரசர்கள். இணைந்த நண்பர்கள். இளங்கண்டீரக்கோ என்றும் இளவிச் சிக்கோ என்றும் பெயர் பெற்றவர்கள். இருவரும் ஒரு நாள் ஒருங்கமர்ந்திருந்தனர். பெருந்தலைச் சாத்தனார்