பக்கம்:வீடும் விளக்கும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 விடும் விளக்கும் என்னும் புலவர் பெருமான் அவர்களை அணுகினார். இளங்கண்டீரக் கோவை மட்டும் பலவாறு புகழ்ந்தார். அன்பிற்கறிகுறியாகத் தழுவியும் கொண்டார். தாம் ஒரு புலவராயிருந்தும் இளவிச்சிக்கோ ஓர் அரசனாய் இருந்தும் அவனை ஏறெடுத்தும் பார்த்தாரிலர். இளவிச்சிக்கோவின் மனம் வேலை செய்யத் தொடங்கியது. என்ன ஒரு புலவன் ஓர் அரசனை மட்டுமா கொண்டாடுவது? அருகிலிருக்கும் நம்மை ஏறெடுத்தும் பார்த்தானில்லையே, இ.தென்ன மனத் திண்மை' என்று பல எண்ணினான். வெட்கமும் வருத்தமும் ஒருங்கே கொண்டான். அதனோடு கின்றா னில்லை. ஏ புலவரே! நாங்கள் இரண்டரசர் வீற்றி ருக்கின்றோம். எம்மில் ஒருவரைக் கொண்டாடி மற்றொருவரை விட்டதற்குக் காரணம் என்ன என்று மனம் எண்ணியதை வாயால் கேட்டும் விட்டான். உடனே புலவர் அரசனென்றும் அஞ்சினாரிலர். நடுங் கினாரிலர். உள்ளத்தில் தோன்றிய உண்மையை எடுத்துக் கூறலானார்: "ஆம் அரசே! நீ கூறியது உண்மைதான். கண்டீரக்கோவைப் பாராட்டினேன். நின்னைப் பாராட்டவில்லை. அதற்குத்தக்க காரண மும் உண்டு. கேட்பாயாக. பண்டைக் காலந்தொட்டே கண்டீரக் கோவி னுடைய நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள். பாடும் புலவர் வந்துவிட்டால் பலவிதத்திலும் போற்று வார்கள். பரிசு கொடுத்தும் அனுப்புவார்கள். ஆண்கள் தாம் என்றல்லர். பெண்களும் அப்படியே. தம் கணவர்