பக்கம்:வீடும் விளக்கும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 53 வெளியூருக்குச் சென்றுவிட்ட சமயத்தில் யாராவது வந்து விட்டார்களென்று வைத்துக்கொள்வோம். கணவர் வரும்வரையும் வந்தவர்களைக் காக்க வைத்திருக்கமாட்டார்கள். பயனின்றியும் அனுப்ப மாட்டாகள். உணவு முதலியவற்றால் உளங்குளிரச் செய்வார்கள். அதுமட்டுமா? தம் தகுதிக் கேற்பப் பெண் யானைகளை அணிகலன்களால் அழகுபடுத்தி அவற்றைப் பரிசாக அளிப்பார்கள். அத்தகைய உயர்ந்த மனப்பான்மை நிறைந்த உறவினர்களையும் குடிமக்களையும் உடையவர் கண்டீரக்கோ. ஆதலின் அவரைப் பாராட்டினேன். கின்னையும் பாராட்ட வேண்டியதே. ஆயினும் நீ பெண் கொலை புரிந்த நன்னன் உறவினன். மற்றும், பாடும் புலவர் நின்னைக் காண வரின், கின்கோட்டை அவர்க்கு அடைத்த கத வோடு காட்சியளிக்கும். ஒருவரும் உள்ளே புகவும் முடியாது. ஒருவிதமான பயனையும் பெறவும் முடியாது. கின்னைப் பாராட்டாது விட்டதும் அதனாலேயே. நான் மட்டுமா? என்போன்றோர் எவருமே நின்னைப் பாராட்டுவதில்லை' என்று கூறி முடித்தார். இவ் வரலாற்றை, அப்புலவர் பாடிய “பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப' என்னும் புறநானூற்றுப் (151) பாடல் புலப்படுத்துகின்றது. கணவர் இல்லாத நேரத்தும் பெண்கள் விருந்தோம்பியதால் அந்நாட்டின் அரசனுக்கே பெரும்புகழ் கிடைத்துளதன்றே! இதனை நோக்கின் விருந்தோம்பலின் சிறப்புத்தான் என்னே! அதன் பெருமையே பெருமை!