பக்கம்:வீடும் விளக்கும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 விடும் விளக்கும் சில பெண்டிர் தாழ்நிலை: இச்சிறப்பறியாத பெண்டிர் சிலர் பிற்போக்குடன் கடந்துகொள்கின்றனர். விருந்தினர் வந்துவிடின் கற்றன. வெல்லாம் கையாண்டு பார்க்கின்றனர். வந்தவரை நோக்கி, 'சாபிட்டே வந்துவிட்டீர் போலும்' என்பார் சிலர். 'நுமக்கு எம் வீட்டு உணவு ஏற்குமா?' என்பார் சிலர். இன்னோர்க்கு உணவளிக் கவும் மனமிராது. அளிக்காவிடினும் என்ன குறை நேருமோ என்ற அச்சமும் வாட்டும். ஆதலின், இன்னோர் விருந்தினரை ஆராய (சோதிக்க)த் தொடங்குவார்கள். பல் துளக்குகின்றீர்களா என்றாயினும், குளிக்கின்றீர்களா என்றாயினும் சில (சோதனைக்) கேள்விகளைப் போட்டுப் பார்ப்பார்கள். விருந்தினர் வேண்டா என்று கூறுதலோ, மயங்குதலோ செய்வாராயின் பதமாக வழியனுப்பிவிடுவார்கள். உண்பதாக ஒத்துக்கொண்டாலோ, வேண்டா வெறுப்பாய்ப் பின்பே சமைக்கத் தொடங்குவார்கள். கழுத்தணியான கதை: சில வீடுகளில் கணவன் விருந்தினரை அழைத்துக் கொண்டு வந்துவிடுவான். மனைவிக்கு மனமிராது. ஒரே போராட்டங்தான். வந்தவர் தாமாகவே பறந்து விடுவார். நல்லவருக்கு அடையாளம் சொல்லாமற் போதல் அல்லவா? சில ஆண்கள் விருந்தினரைக் கண்டதும் அஞ்சுவதும் மறைந்துகொள்வதும் இதனாலேயே. சில நேரங்களில் உணவுக் கடையில் உண்ணச் செய்து அப்படியே அனுப்பிவிடுவது முண்டு.