பக்கம்:வீடும் விளக்கும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 55 மீறி அழைத்துக்கொண்டு வந்த ஆடவன் ஒருவனது தலையில் சட்டி உடைக்கப்பட்டுக் கழுத்திற்கு அணிகலமான கதை இங்கு நினைவிற்கு வருகின்றது. வீணாய் உடைந்த சட்டி வேணதுண்டு என்தலையில் பூணாரம் பூண்ட புதுமைதனைக் கண்டதில்லை' என்னும் அடிகளே இதற்குச் சான்றாகும். இதைப் போன்ற நகைச்சுவை ததும்பும் மற்றொரு கதையும் உண்டு. ஒளவையார் ஏமாற்றம்: விருந்தாக வெளித் திண்ணையில் அமர்ந்திருந்தார் ஒளவையார். அவரை எப்படியாவது உண்ணச் செய்ய வேண்டும் என்பது அவ்வீட்டு ஆடவனின் ஆவல். ஆனால் மனைவியோ கொடுமையின் இருப்பிடம். விருந்து வந்துளதென அவளிடம் அறிவிக்கவும் அச்சம். ஆதலின் அவளைத் தன்வயப் படுத்துவதற்காகச் சில தொண்டுகள் செய்ய முற்பட்டான். அவள் அருகில் சென்றான். தலையி லுள்ள ஈரையும் பேனையும் எடுத்தான். கூந்தலைக் கோதி முடித்தான். தண்ணிரால் முகத்தைத் தூய்மை செய்து துடைத்தான். பொட்டிட்டான், மற்றும் பணிவிடைகள் பல புரிந்தான். இனி நம் குறையை மனைவி ஏற்கலாமென அரைகுறையாய் நம்பினான். கட்டிக்கொண்டான் கையை. பொத்திக்கொண்டான் வாயை. மெல்ல விருந்து வந்துள்ளதென விண்ணப்பம் செய்தான். அவ்வளவுதான். அம்மைக்கு வந்தது சினம். எழுந்தாள். ஆடினாள். சரமாரியாகப் பாடி