பக்கம்:வீடும் விளக்கும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 விடும் விளக்கும் னாள் சில பாடல்களை. அவனோடினான். விட்டா ளில்லை. தானும் ஓடினாள். பழமுறத்தாலும் சாடினாள். இவ்வளவுதானா? இன்னும் என்னென் னவோ சிறப்புகள் எல்லாம் செய்தாள். பார்த்தார் ஒளவையார். என்ன செய்வார் அந்தோ! இவ்வளவு நேரம் அவர் வாய் உண்ணக்காத்திருந்தது. இப்போது ஏமாற்றம் எய்திற்று. ஆனால் உண்பதற்குப் பதிலாக, 'இருந்து முகத்திருத்தி ஈரொடு பேன்வாங்கி விருந்துவந்த தென்று விளம்ப-வருக்திமிக ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால் சாடினாள் ஒடிமுன் தான்' என்று பாடத் தொடங்கிவிட்டது அவ்வாய். சில ஆடவர் தாழ்நிலை: ஆனால் இவ்விதமான பெண்கள் எங்கேயோ சிலர் தாம் இருப்பார்கள். பெண்கட்கு இக்குணம் சிறிதும் கூடாது. பெண்மைக்குரிய தாய்மை உள்ளமே இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமா? ஆண்களும் ஒத் துழைக்க வேண்டும். சில ஆண்கள் இதற்கு முரணாய் உள்ளார்கள். எச்சில் கையால் காக்கை ஒட்டாதவர் என்பது இன்னோரையே. தப்பித் தவறி மனமிரங்கி மனைவி விருந்தோம்பினாலும் வைவார்கள். அடிக்கவும் செய்வார்கள். அதனால் பெண்மணிகள் சிலர், கணவர் அறியாதபடி விருந்தோம்பிக் குடும்பத்தை விளக்கப் படுத்துவதுமுண்டு.