பக்கம்:வீடும் விளக்கும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 57 விருந்தோம்பும் சிறப்புரிமை: இல்லறத்தார்கள் இவ்வளவு குறுகிய மனப்பான்மை யுடன் இருக்கக்கூடாது. தங்கள் வயிறுமட்டும் வளர்ந் தால் போதுமா? உயிர் வாழ்வதற்காக உண்கின் றோம்; உண்பதற்காக உயிர் வாழவில்லை' என்னும் பொன்மொழியின் கருத்து ஈண்டு ஆராய்வற்குரியது. உலகில் பலர்க்கும் உதவி வாழவேண்டும். அதற்காக உயிர் நீண்ட நாளைக்கு உடம்பில் கிலைக்கவேண்டும். அதற்காக உண்ணவேண்டும். இங்ங்ணமின்றி ஒருவர்க்கும் உதவாமல் தாம் மட்டுமே உண்டு உறங்குவதற்காக உயிர் வாழக் கூடாது. இக்கருத்தை அப்பொன்மொழி புலனாக்குகின்றது. 'மருந்தே யாயினும் விருந்தோடுண்' என்பது மற்றொரு பொன் மொழியாம். ஆனால், மற்றொன்று; கணவற்கு மனமில்லாது போயினும் மனைவியால் விருந்தோம்ப முடிந்தாலும் முடியலாம். மனைவிக்கு மனமில்லாது போனாலோ கணவனால் சிறிதும் முடியவே முடியாது. பழக்கமின்றித் திடீரெனச் சிறிது வெந்நீர் சுடவைத்துக் கொடுக்கவும் முடியாது. வீட்டிலுள்ள தாள்களும் (காகிதங்களும் மண்ணெண்ணெயும் தீர்ந்திருக்குமே தவிர அடுப்பு மூண்டிருக்காது. இப்பணி சிறப்பாகப் பெண்மக்கட்கே உரியதாம். எனவே பெண்மணிகள் இக்கடமையை உணர்வார்களாக. அவ்வீடே விளக்கம் பெறும். கணவனைக் காத்தல்: மேலும், வீடுகளில் பெண்கள் இல்லாவிட்டால் ஏமாற்றம் விருந்தினர்க்கு மட்டுமா? வீட்டிற்குரிய