பக்கம்:வீடும் விளக்கும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 விடும் விளக்கும் ஆடவனும் நலம் பெறுவதில்லை. சில சமயங்களில் முழுப்பட்டினியும் கிடக்கவேண்டியிருக்கின்றது, சமை யல்ாள் வைத்து உண்பதும், உணவுக் கடையில் உண்பதும் உயிர்ப்பற்றவையாகும். சமையலாட்கும் உணவுக் கடைக்காரர்கட்கும் உண்பவர் கிரம்ப உண்ண வேண்டுமென்ற பேரன்பு உண்டோ? உணவு உடம்புக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற பேரிரக்கந்தான் உண்டோ? பிழைப்புக்காகவே அவர்கள் செய்கின்றார் கள். உண்மையானவர் எங்கேயோ ஒருவரிருவர் இருக்கலாம். போதுமா? கணவரை இனிய பேச்சாலும் இனிய உணவாலும் இன்புறச் செய்பவர்கள் பெண்டிரே. இத்தகைய மனைவியைப் பெற்ற ஆடவனுக்கே வீடு விளக்கமாகத் தோன்றும் என்பது தெளிவு. இதனைக் குறுந்தொகைச் செய்யுள் ஒன்றால் உணரலாம். கணவற்குத் தொண்டு: தம் கணவனுக்குத் தக்க முறையில் தொண்டு செய்த ஓர் பெண்ணின் பெருமையை, அவள் செவிலித்தாய் பெற்ற தாயிடம் பின் வருமாறு புகழ்ந்து பேசலானாள். 'நம் பெண் தன் கணவனிடத்தில் எவ்வளவோ அன்புடையவளாகக் காணப்படுகிறாள். காலநீட்டிப் பில்லாமல் சுவையோடும் சமைத்து அவனுக்குப் பரிமாறுகின்றாள். ஒருநாள் நிகழ்ச்சி ஒன்றை ஒதுவேன் கேள்! விலையுயர்ந்த ஆடை உடுத்திக்கொண்டிருந் தாள். அதனோடு தயிர் கடைந்தாள். அவ்வமயம் அடுப்பின் மேல் வைத்திருந்த உணவு கொதிக்கத்