பக்கம்:வீடும் விளக்கும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 59 தொடங்கியது. உடனே தயிர் கடைவதை விட்டு விரைந்தெழுந்தாள். கட்டியிருந்த புடவைநெகிழ்ந்தது. விலையுயர்ந்த தென்றும் எண்ணாது தயிர்கடைந்த கையாலேயே புடவையைக் கட்டியபடியே அடுப்பின் அருகில் ஓடினாள். தாளிதப்புகை கண்ணையும் முக்கையும் அப்புவதையும் பொருட்படுத்தாது தாளிதம் செய்தாள். இங்ங்ணம் விரைவில் சுவை கிரம்பிய உணவு சமைத்துக் கணவற்குப் பரிமாறினாள். அவனும் மிகவும் நன்றாயுளது எனப் பாராட்டிக் கூறி உண்டான். அவன் சொல்வதைக கேட்டாள். ஆவ லோடு உண்பதையும் கண்டாள். அவள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நான் அருகில் இருத்தற்கு நாணி, மிகவும் நுட்பமாக மலர்ந்தது அவள் முகத்தாமரை. என்னென்று புகழ்வது அவள் குடும்பத்திறனை' என்று பெண்ணின் குடும்ப விளக்கத்தை அழகாக எடுத்தியம்பினாள். இவ்வரலாறு. 'முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கழுமத் தான் துழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே' என்னும் குறுந்தொகைப் (167) பாடலில் குறிக்கப் பட்டுள்ளது. எனவே நன்மனைவியால் கணவன் பெறும் நன்மைகள் பல என்பது போதரும்.