பக்கம்:வீடும் விளக்கும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வீடும் விளக்கும் கண்ணகியின் காதல்: மேலும், இவ்விடத்தில் கண்ணகியின் காதற் செய லொன்றினை நினைவுக்குக் கொண்டுவராமல் இருக்க முடியவில்லை. அவ்வரலாற்றை அழகாகச் சிலப்பதி காரத்தில் பொறித்துள்ளார் இளங்கோவடிகள். கண்ணகி கோவலனுடன் மதுரையில் மாதரி வீட்டில் அடைக்கலம் புகுந்தாள். கணவன் களைப்பைப் போக்கச் சமைக்கவும் தலைப்பட்டாள். அவள் பிறந்ததோ மிகப்பெருஞ் செல்வக் குடும்பம். வளர்ந்ததோ பல பணிப் பெண்கள் சூழ, வாழ்க்கைப் பட்டதும் இரும்பெரும் செல்வக் குடும்பமே. ஆதலின அவள் கடுமையான வேலைகளைச் செய்தறியாதவள். இவ்வியல்புடைய கண்ணகி, கணவற்கு ஏதோ பசி தீரும் அளவில் எதையோ கொதிக்க வைத்தாளில்லை. எங்கேயோ ஒரு மூலையில் இருக்கச் செய்து அள்ளிப் போட்டாளிலள். பலவிதமான காய்களையும் அரிந்தாள். அதனால் மெல்லிய கைவிரல்கள் சிவந்தன. அடுப்பு மூட்டிச் சமையல் தொடங்கினாள். அதனால் கண்கள் சிவந்தன. முகத்தில் வியர்வை தோன்றிற்று. பொருட் படுத்தினாளில்லை. கணவனைக் களிக்கச் செய்யக் கைப்பாகத்திறன் முழுதையும் பயன்படுத்தினாள். சமைத்தும் முடித்தாள். பின்பு, தூய்மையானதோ ரிடத்தில் ஒரு தடுக்கையிட்டாள். கணவனை அதில் அமர வைத்தாள். பூப்போன்ற அழகிய கையால் கால் களில் தண்ணீர் விட்டுத் தூய்மை செய்தாள். வணங்கினாள். பின், அவன் முன்பு தண்ணீர் தெளித்துத் தடவிவிட்டாள். அவ்விடத்தில் ஒரு தலை