பக்கம்:வீடும் விளக்கும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 61 வாழை இலையைப் பரப்பினாள். பணிவுடன் பரிமாறி னாள். அன்பரே! நன்றாக உண்டு மகிழ்க’ என்று இன்மொழியும் புகன்றாள். கோவலன் நாக்கு அறுசுவை யமு தால் இன்புற்றது. இடையிடையே தேனுறப் பாலுறப் பேசிய கண்ணகியின் இன்சொலால் செவி களும் இன்புற்றன. அவன் மனமார வயிறார உண்டு மகிழ்ந்தான். ஒரு மனைவி தன் கணவற்குச் சென்ற இடத்தில் இவ்வளவு சிறப்புச் செய்வதென்றால் எளிதா? இந் நிலை பலபடப் பாராட்டிப் பகர்தற்குரியதாம். இங் நிகழ்ச்சி முழுவதையும் சிலப்பதிகாரத்தால் செவ்விதின் உணரலாம். கண்ணகி கற்புடையளாகக் கொண்டாடப் பெறுவது இதனால் அல்லவா? இதுமட்டுமா? கோவலன் பெயர் இன்றும் உலகில் விளங்குவதற்குக் காரணமும் கண்ணகி யென்னும் விளக்கேயன்றோ? தம் இல்லும் தம் உணவும்: இங்கு மற்றொன்று கோக்குதற்குரியது. கண்ணகி வெளியூரில் பிறர் வீட்டிலேயே இங்ங்னம் சிறப்புச் செய்துளாள் என்றால், கணவன் ஊரில் கணவன் வீட்டில் எவ்வளவு சிறப்புச் செய்திருப்பாள் என்பது நன்கு விளங்கும். பிறர் வீட்டில் பிறரால் கொடுக்கப் பட்டு உண்ணும் தெய்வ அமிழ்தத்தைவிட, தம் வீட்டில் மனைவிமக்களுடன் கூடியும், பலர்க்கும் பகுத்துக் கொடுத்தும் உண்ணும் தம் கூழ் மிகச் சிறந்ததாகும். இதனைத் தித்திக்கத் தித்திக்கத் தேனொழுகும் திருக்குறள் ஒன்றால் தெளியலாம்.