பக்கம்:வீடும் விளக்கும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர சண்முகனார் も7 கணவற்கு உணவு பரிமாறுங் காலத்தில் தாய்போல் தலையன்பு செலுத்த வேண்டும். தாய்க்கடுத்தது தார'மன்றோ? நோயுற்ற காலத்தில் மருத்துவர் போன்று மருத்துவம் செய்ய வேண்டும். கணவன் ஒரு காரியத்தைச்செய்யத் தொடங்கின் அமைச்சனைப் (மந்திரி) போன்று அறிவு கொளுத்த (யோசனை கூற) வேண்டும். தளர்ந்த காலத்தில் நண்பனைப் போன்று உதவ வேண்டும். தீயவழியில்செல்லின் அமைச்சனைப் போன்றும் நண்பனைப் போன்றும் இருந்து இடித்துரைத்து கல்வழிக்குத் திருப்பவேண்டும். இப்பல்வகை வன்மைக்கு எடுத்துக்காட்டாக மங்கையர்க்கரசியம்மையாரைப் போன்ற உயர்நலப் பெண்மணிகளின் வரலாற்றை மேற்கொள்ளலாம். மங்கையர்க்கரசியின் மாண்பு: மதுரை மாநகரில், கூன்.பாண்டியன் என்னும் அரசன் ஆண்டுகொண்டிருந்தான், பண்டைக் காலத்திலிருந்து தம் முன்னோர் கைக்கொண்டு வந்த சைவ சமயத்தைப் புறக்கணித்தான். இடையே சமண சமயத்தைத் தழுவினான். நாடு முழுமையும் சைவ விளக்கம் குன்றத் தலைப்பட்டது. அவன் மனைவி மங்கையர்க்கரசியார்க்கு அது பிடிக்கவில்லை. எங்ங்ணமாயினும் உரிய சமயமாம் சைவத்திற்குக் கணவனைத் திருப்பவேண்டுமென்று அம்மையார் எண்ணினார்கள். சீர்காழியில் தோன்றிய திருஞான சம்பந்தாை வரவழைத்தார்கள். சம்பந்தர்க்கும் சமணர்க் கும் சமயப்போர் நிகழ்ந்தது. சம்பந்தரே வெற்றி