பக்கம்:வீடும் விளக்கும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 விடும் விளக்கும் பெற்றார். பாண்டியனும் கூன் நீக்கப்பெற்று நின்ற சீர் நெடுமாறன் எனப் பெயர் பெற்றான். அம்மையார் எண்ணமும் நிறைவேறியது. நாடும் நலமுற்றது. அனைவரும் அவரே! ஈண்டு மங்கையர்க்கரசியம்மையாரைப் பாண்டிய னுக்கு மனைவி யென்று மட்டும் கூறுவதா? வேலைக் காரியென்றுதான் விளம்புவதா? அல்லது, கூன் நீக்கும் படிச் செய்ததால் மருத்துவர் என்றழைப்பதா? தமக்குரிய சைவசமயத்தைவிட்டுப் புறச்சமயமாகிய சமணத்தைத் தழுவிய தவறைத் திருத்தியதால் அமைச்சன் என்பதா? ஆருயிர் நண்பன் என்பதா? அல்லது சமய குரு என்றே சாற்றிவிடலாமா? ஆகவே அம்மையார் அனைவருமாக இருந்து, அவன் அரசி யலையே விளக்கம் பெறச் செய்தார் என்றால் மறுக்கவும் முடியுமோ? மற்றும் தன் கண்வனைக் கொலை செய்வித்த கொடுமைக்கு மனம் பொங்கி, அவ்வூர் அரசன் முன்பு சென்று, நீதிகள் பலவற்றைக் கூறி, அவ்வூரையே எரித்து ஒறுத்த (தண்டித்த) கற்புசால் கண்ணகியைப் பெரிய வழக்கறிஞர் என்றோ, பெரிய நீதிபதி என்றோ கூறினால் வரும் தவறென்ன உளது? பெரியார்களின் வாய்ப்பு: இங்ங்னம் நன்மனைவியரைப் பெற்றதனால் அன்றோ பாண்டியன் பண்பட்டான்; சிறுத்தொண்டர் சிறப்புற்றார்; இளையான்குடிமாறர் இன்பெய்தினார்;