பக்கம்:வீடும் விளக்கும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 69 திருவள்ளுவர் திகழ்ந்தோங்கினார்; பல பெரியார்களும் பற்பல நன்மைகள் வாய்க்கப் பெற்றார்கள். அவர் வீடுகள் எல்லாம் இன்பத்திற்குரிய எழிலிடமாகக் காணப்பட்டன. ஒத்துழைப்பு: ஆனால், ஆண்கட்கு உழைக்கவே பிறந்தவர்கள் பெண்கள்; ஆண்கள் அவர்களை வருத்தித் தம் விருப்பம் போல் வேலைவாங்கிக் கொள்ளலாம் என்றெண்ணுவதோ, பேசுவதோ, செய்வதோ மிகப் பெருந்தவறாகும். ஆடவரும் அவர்தம் நற்பணிக்கு ஒத்துழைத்து அவர்களை நன்முறையில் நடாத்தல் வேண்டும். அப்போதே பெண்மக்களின் வாழ்க்கையும் பொலிவு பெறும். மேலும் மேலும் அவர்களால் குடும்ப விளக்கமும் செய்ய முடியும். இதனை அறியாத அறிவிலிகள் சிலர், கீரியும் பாம்பும் போலவும், எலியும் பூனையும் போலவும் இருந்து வருகின்றார்கள். ‘'வேண்டாம் என்ற பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்' என்றது வீணா? அவ்வீட்டில் எப்போதும் ஒரே இரைச்சல் குடிகொண்டிருக்கும். கண்டோர் நகைப்பர். இங்ங்ணம் இருத்தலாகாது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள கணவனும் மனைவியும், திருவள்ளுவரைப் போன்றும் அவர்தம் மனைவியைப் போன்று மிருந்து வாழ்க்கை நடாத்தல் வேண்டும். அவ்வீடே விளக்கம்பெறும். குடும்பத்தில் கணவன் குடி, சூது முதலிய தீநெறிகட்கு அடிமைப் பட்டுக் கெட்டவனாய் இருப்பினும், மனைவி தன் திறமையால்