பக்கம்:வீடும் வெளியும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 翠瑩隊 கனவு கண்டவர்கள் வெறும் சொல் வீரர்களாகவும் கையாலாகாதவர்கள் ஆகவுமே காணப்படுகிருர்கள்." இயங்கியது. மகாத்மாவின் நோக்கமும் லட்சியக் கொள்கைகளும் தவருனவை, கோளாருனவை என்று அவளுல் கருத இயலவில்லை. அவரைப் போலவே, அவற்ற ல் நம்பிக் கையும் ஆழ்ந்த பற்றுதலும் கொண்டு, தீவிரமாகச் செயல் புரிந்தவர்கள்- ன்னதமான கொள்கைகளில் அசைக்க முடியாத பிடிப்புக்கொண்டு லட்சிய வாழ்வு வாழும் ஆத்ம பலம் பெற்றவர்கள் - நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும்தான் இருக்கிரு.ர்கள். காந்திஜியின் கொள்கைகளிலும் அவரது லட்சியங்களிலும் பற்றுதல் இல்லாத, நம்பிக்கை கொள்ள முடியாத, சுசம் விரும்பி களும், சுலபப் புகழ் விரும்பிகளும், பணமோகிகளும் இஷ் டம்போல் செயல் புரியும் உரிமை பெற்று விட்டதஞல் தான் கோளாறுகளும் குறைபாடுகளும் மவிந்து வரு கின்றன. மதுவிலக்கிளுல் நன்மையே விளையும் என்ரு ர் மகாத்மா, குடி மனிதரை மிருகமாக்குகிறது; பல வழி களில் தீங்கு விள விக்கிறது. பொருளாதாரத்திலும் கேடு உண்டாகிறது என்று அவர் எடுத்துக் காட்டினுர். மதுவிலக்கு சட்டபூர்வமாக அமுலுக்கு வந்த பிறகு, நன் மைகள் ஏற்பட்டுள்ளன என்பதை எளிதில் உணரலாம். முன்பெல்லாம் பொது இடங்களில், முக்கியமான பகுதி களில், கள்ளுக் கடைகளும், சாராயக் கடைகளும் இருந்து சுற்றுப்புறத்தைக் கெடுத்து வந்தன. எந்நேர மும் குடி வெறியர்கள் ரகளே செய்து வெறித் தனமாக நடந்து வந்தனர். நாகரிகம் மிகுந்த பெரிய நகரங்களில் கூட இவை சகஜமான காட்சிகளாக இருந்தன. இம் போது கள்ளச் சாராயம் தயாரித்து, திருட்டுத்தனமாக விற்கிறவர்களும் குடிக்கிறவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகவே இருக்கலாம். இருந்த போதிலும், இத். தீமைகளைவிட அளவில் பெருகிய நன்மைகள் நாடு முழு. வதும் பரவலாக ஏற்பட்டிருப்பதும் நன்கு புலணுகும். வீ. வெ. 10-445