பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

13



வீரத் தலைவர் பூலித்தேவர் iš போக்கை கினைந்து வேதனையுற்றும் தம் கோட் டைக்குத் திரும்பினர். இந்தச் செய்தி திருச்சியில் இருந்த கான்சாகிபு வுக்குப் போர் நடந்த மூன்ரும் நாளே எட்டிற்று. கட்டபொம்முவையும் எட்டையபுரத்தார் பிணேயாக விட்டிருந்த ஆட்களையும் அழைத்துக்கொண்டு கான் சாகிபு தென்திசை நோக்கினன். கயத்தாற்றில் மாபூஸ்கானேக் கான் சாகிபு சந்தித்தான். கட்ட பொம்முவையும் அவர் ஆட்களையும் உதவியாகக் கொண்டு மாபூஸ்கான் வெற்றி பெற்றிருந்தாலும், அவன் கண்கள் அழுதுகொண்டிருந்தன." கார ணம், அவன் பூலித்தேவரைப் பற்றி நன்கறிவான்; தன் வெற்றி நெடுநாளைக்கு கிலேக்காது என்பதை யும் அறிவான். மேலும், பாளையங்களிடம் அவன் எதிர்பார்த்தபடி பணவசூல் நடக்கவில்லை. கயத்தாற்றை விட்டுக் கான்சாகிபு எட்டைய புரம் சென்றன். அவனேக் கட்டபொம்முவும் எட் டையபுரத்தாரும் எதிர்கொண்டு வரவேற்றனர். அங்கிருந்து புறப்பட்டுக் கான்சாகிபு தென்பாண்டி நாட்டில் ஒவ்வொரு பாளையத்துக்குள்ளும் நுழைக் தான்; கப்பப் பணத்தை வசூல் செய்தான்; தயங்கிய வர்களையும் மறுத்தவர்களேயும் தாக்கினன்; தலை குனியச் செய்தான்; இறுதியாகச் சீவில்லிபுத்துரை அடைந்தான். அரசியல் கந்திரத்தில் வல்லவரான பூலித்தேவர், கான்சாகிபு ஒரு பேய் மனிதன் என் பதை நன்கறிவார்; அதனல், தம் பிரதிநிதிகளே அனுப்பி நல்ல வார்த்தை பேசி அவனே வறிதே திரும்பிச் செல்லுமாறு செய்தார்."