பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

25



வீரத் தலைவர் பூலித்தேவர் 25 டைக்கு எதிர்ப் புறத்திலிருந்து தாக்கினர். அவர் அவ்வாறு தாக்குவதை அறிந்து வாசுதேவ நல் அார்க்கோட்டைக்குள் இருந்த வீரத்தமிழ் மறவர் பல்லாயிரவரும் அப்புறத்திலிருந்து வெற்றி ஆர வாரம் புரிந்து கும்பினிப்படையைக் காக்கினர். பூலித்தேவருடைய இந்த இருமுனைத் தாக்குதலால், ஆப்பசைத்த குரங்கின் கதியாயிற்று கம்மந்தான் கிலே. பூலித்தேவர் படையிலிருந்த கள்ளர், மறவர், அகம்படியர் அனைவரும் கும்பினிப் படையைத் துவட்டி எடுத்தனர். இரு தரப்பிலும் பெருஞ் சேதங்கள் ஏற்பட்டன எனினும், பூலித்தேவர் படை யினரே முடிவில் வாகை மாலை சூடினர். " பூலித்தேவரின் நோக்கம் தமிழகத்தை அங்கிய ஆட்சியினின்றும் காப்பது; கம்மந்தானது நோக் கமோ, தமிழகத்தை அங்கியருக்கு அடிமையாக்கி அவர்களிடம் நல்ல பெயர் வாங்கித் தானே சர்வாதி காரி ஆவது. எனவே, வாசுதேவ கல்லூர்ப் போர் தமிழகத்தின் விடுதலைக்காக நிகழ்ந்த போரே. இரண்டு மாதங்கள் கடந்த இக்கடும்போரில் தம்மை எதிர்த்த பல்வேறு கொடுமைகளையும் விடுதலை வீரர் கள் முறியடிக்க வேண்டியிருந்தது. பூலித்தேவரின் வெற்றி கம்மந்தானுக்குவிழுந்த பேரிடி, பூலித்தேவருக்கோ, உண்மையில் இது மிகப் பெரிய வெற்றி, அவர் புகழ் மலிந்த வாழ்வின் பொற்சிகரம். சுதந்தர வீரர்களை அடக்க ஏறத் தாழ இரண்டு மாதங்கள் கடுமையாகப் போராடி யும் பயனில்லாமல் தோற்றுப்போன கான் சாகிபு