பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

41



மாதம் 4-ஆம் தேதி முற்றுகையிட்டான். இந்த வாசு தேவநல்லூர்க் கோட்டை, பூலித்தேவருடையது ; தெற்கட்டுஞ்செவ்வல் கோட்டையைத் தவிர, பிற எல்லாக் கோட்டைகளைக்காட்டிலும் பலம் வாய்ந்தது. நெற்கட்டுஞ்செவ்வலிலிருந்து வாசுதேவநல்லுரர்க் கோட்டை 20 மைல் வடமேற்கில் இருந்தது; ஊத்து மலேயிலிருந்து அதே திசையில் 12 மைல் தொலைவில் இருந்தது.

  • வாசுதேவநல்லூர்க் கோட்டை மேற்குமலைத் தொடர்க்கு மூன்று மைல் தொலைவிற்குள் இருந்தது. கோட்டையைச் சுற்றி இரு மைல் நீளம் உள்ள காடு இருந்தது. இக்காடு மேற்கிலும் தெற்கிலும் ஆயிரத்து முந்நூறு கெஜம் பாப் புடைய தாயும் வடதிசையில் இன்னும் அதிக பரப்புடையதாயும் அமைந்திருந்தது. கீழ்த் திசை வெட்டவெளியாய் விளங்கியது. வாசுதேவநல்லூரைச் சுற்றி எங்குப் பார்த்தாலும் கெற்களஞ்சியங்கள் நிறைந்திருந்தன. கோட்டை க் கு காற்பது கெஜத் தூரத்தில் சில ஆயிரம் பேர்களின் குடியிருப்பு இருந்தது. அப் பேட்டை 1200 கெஜம் வடகீழ்த் திசையில் அமைந் திருந்தது. கோட்டையையும் பேட் ைட யையும் சுற்றிப் பலத்த முள் வேலி இருந்தது. கோட்டை அறுநூற்றைம்பது கெஜ நீளமும் முந்நூறு கெஜ அகலமும் கொண்டது; மண்ணுலாகியது எனினும், செங்க ல் லா ற் கட்டப்பட்டது போன்ற வன்மை வாய்ந்தது. கோட்டை யி ல் நான்கு பெரிய சதுர மான கொத்தளங்கள் இருந்தன. இவை மூலைக்கொன்முய் அமைந் திரு ங் தன. இன்னும்