பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 சக்தி சடாச்சரி வீரமல்லு பொம்மு சக்கதேவி பதந்தான் தொழுது வெற்றி செய்து வெளியேறவென்று துரை பாலா ஈட்டி குலுக்கலுற்ருன் துரை மார்களைக் குத்தியிழுக்கலுற்ருன் இலாமீன் போலே பாயுகிராரிடை வாளருவாள் கொண்டு வீசுகிருர் தோரையைக் குத்தி இழுத்தால் போல் கன சோஷர்களுமங்கே பாடாச்சு பாதையிடிந்து விழுந்தால் போய்கன பட்டாள மேசரும் பட்டாச்சு காளிகோவில் பொங்கவிட்டாப் போல் கன மூளிக்கிடாய் வெட்டி வீழ்ந்தாப் போல் 6370 தாழியுடைந்து தகர்ந்தாற் போல் முட்டை கோழி கிடந்து துடித்தாற்போல் மாடமிடிந்து விழுந்தாற்போல் துரை மன்னவன் கும்பினிப் பட்டாளம் கூடமிடிந்து விழுந்தாப்போல் கல்லுக் கோட்டை சிதறி விழுந்தாப்போல் படபடென்று துரைவீரபாண்டியன் பாயும்புலி போலே சீறிநின்று குடுகுடென்று அங்கே சோஷர் பட்டாளத்தைக் கொன்றுமே வெட்டியெறிந்திடுவார் 6 ?3ひ தலைகள் வேறேஉடல் வேறே அங்கே சாயுதே பூதகணம் போலே வலையிலகப்பட்ட மான்போலே அங்கே மடிந்துபோகுதே பட்டாளம் உரப்பெட்டிகள்போல தொப்பிகள் ஒடவே உருண்டுபோகுதே பட்டாளம் பிரப்பங் கூடைபோல் தொப்பிகளோடவே பிரண்டுபோகுதே பட்டாளம் சோஷர்பட்டாளம் முறிந்தய்யோ துரை மார்களும் அங்கே மடிந்தார்கள் 6,390 மேஷர்பட்டாளம் வெகுண்டிடவே பரு வெள்ளரிக் காய்போலே வெட்டுகிருர்