பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 மக்களுடன் துரைதான் மடிந்தார்துரை வாசுகி தேசுகிதான் மடிந்தார். அக்கரவம்புனை சொக்கர் செயலென்று. ஆதி சிவலோகம் சேர்ந்தார்கள். திக்குவிசயனு மத்துரைப் பாண்டியன் தீரன் சமர்த்தையும் என்ன சொல்வேன். சக்கரம்போலவே தான்சுழன்று இட சாரிவல சாரியாக வந்து 64鲇 அக்கினி மேசர் பட்டாளங்கள் தன்னையும் சுக்கு சுக்காகவே தானடித்தார். அடித்திடப் பட்டாளம்தான் வெறுவியங்கே ஆயுதம்போட்டு இறந்தார்கள் முடிக்கும்பிரமன் விதிப்படியோ வென்று முன்னுறு சோஷர்கள்தான் மடிந்தார். நன்னயமாகவே கும்பினிப் பட்டாளம் முன்னம் விதியென்றுதான் மடிந்தார். மன்னவன் ஊமைத்துரை தன்னுடன் வேகமாய் வந்து எதிர்த்தார் பட்டாளமெல்லாம். 64 {} பட்டாளம் வந்து எதிர்த்திடவேதுரை பார்த்தீபன் கோபமுற்றே சினந்து கட்டாரி ஈட்டியும் தானெடுத்துப் பட்டாக் கத்தியுரைவிட்டுத் தான் பிடித்து மாலயன் காணுத மூலாதாரப் பொருள் வந்துநமக்கு உதவி செய்வாய் ஆலவிடமுண்டோன் தன்னருள் நெஞ்சத்தில் அன்பாகத் தானுந்தியானஞ் செய்தான். கோலமாகத் தானும் புறப்பட்டுமே குலவை யிட்டாரே ஊமைத்துரை 台4荔镜 பூலோகமெய்க்கவே சோஷர் பட்டாளத்தை போர்க்களந் தன்னிலறுத் தெறிந்தான் கால்களற்றுச் சிலபேர் மடிந்தார் அங்கே கைகளற்றுச் சிலபேர் மடிந்தார் தாள்களற்றுச் சிலபேர் மடிந்தார் அங்கே தோள்களற்றுச் சிலபேர் மடிந்தார். மூளைசிதறிவிழுவோரும் அங்கே மூக்கிலே ரத்தம் பரிவோரும்