பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.) ஆனபரிசேனை ஒட்டகையும் அதின் மேலான பேரிகை தான் முழங்க மானபரனுன கட்டபொம்முதுரை வாரசிங்காரத்தைப் பார் தோழி" தம்புரு வீணை முழங்கிடவே வெண் சாமரம் போடத் தமிழ்பாட கெம்பீரமாய்க் கட்டியங் கூறப்பாரு, எச்சரிக்கை யென்று சொல்வாரே 590 மங்கையர் மங்களம் பாடிவர வெகு சிங்கார நாட்டிய மாடிவர சங்கீத மேளங்களுந் தொனிக்க நாக தரமும் வாசித்து தான் முழங்க வல்லையம் நேரிசம் வேல்க்காரர் பந்தி வரிசை யாகவே சூழ்ந்துவர உல்லாசமாகவே கம்பளச் சேருவை யெல்லொருங் கூடிவழி நடக்க தாழை மடல்களும் பிச்சி யிருவாட்சி சாந்து சவாது கமகமென 6 (; Ö பாளையத் துர்டே தானும் ஊமைத்துரைவீர பாண்டியர் வாரதைப் பாருமையா. சாமி பாருக் கெச்சரிக்கை, யென்று சொல்ல சங்கர வட்டக்குடை தானிழற்று பூமிதனில்ச் சுத்த வீரசூரன்கட்ட பொம்முதுரை வாருர் பார்தோழி பாஞ்சால நாட்டுத்துரைமார்கள் நல்ல பாருவுக் கேற்ற ஒயில்க்காரர் பூஞ்சிட்டுத் துப்பட்டா மேல் போட்டுஅவர் போறசிங் காரத்தை பாருமையா 610 நன்னகர் பொன்னகர் குற்ருல நாட்டினில் மன்னன் கட்டபொம்மு வந்தனராம் சன்னதி வாசலின் முன்பாக அங்கே சகல பேர்க்கும் முன்பாக. பக்தியாய் குற்ருல நாதர்தெரிசனம் பார்த்து மகிழ்ந்து தொழுதபின்பு விஸ்தாரக் கூடாரம் போட்டார்களங்கே வேடிக்கை யாய்ச்சபை செய்தார்கள்