பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8} இந்தக் குற்றங்களிருக்க வென்ருர் துரை இன்னொரு குற்றமிருக்கு தென்ருர். 20 2.0 மட்டுக் கடங்காத துஷ்டத் தனங்களாய் சண்டித் தனமாகத் திண்டு முண்டாய் எட்டையபுரஞ் சமீந்தாருட சீமையில் ஏகமாய்க் கொள்ளையடித்த தென்ன ? எப்போது வென்ருனும் காட்டு நாயச்கனுபட்டி எல்லைச் சதிரிலே மேய்ந்த மாட்டை எண்ணுறு மாட்டையுங் கொள்ளை கொண்டாய் இது என்ன ஞாயமடா பாவியென்ருர். அருங்குளத்திலே கம்பஞ் சாணையிலே அஞ்னுாறு கட்டுக் கதிரெடுத்தாய். 20 30 வருமங்களாகவே கொள்ளை யடித்தாயே மார்க்கமோ தீர்க்கமோ யோக்கியமோ ? சத்துரு மோசங்கள் செய்தாயே அங்கே தட்டப்படப்பிலே தீப் போட்டாயே. குற்றங்குறை மெத்தச் செய்தாயே வல்ல கும்பினிக் காயிதாத் தப்பினயே. ஞாயக் கெடுதிகள் செய்யலாமா யிது ராசநீதிக்கு ஒழுங்காமா ? காயிதாத் தப்பி நடக்கலாமா பாவி, கன்னங்களவுகள் செய்யலாமா ? 2040 என்று துரைமார்கள்தான் கேட்க அங்கே நின்றுகட்டபொம்மு யேது சொல்வார். கட்டபொம்மு பதில் நன்ருக என்னுட வெள்ளாண்மை தன்னிலே கன்றுங்கானச்சியை விட்டழித்தான். அழிவு சேதங்கள் செய்ததில்ை துரையே களவு கன்னங்கள் செய்தே னென்ருர், உழவு காட்டிலே வந்ததென்று மாட்டை ஒட்டி உழுதேனென உரைத்தார். காட்டு நாய்க்கனுபட்டி எல்லைச் சதிரிலே காட்டிலிருந்த படப்பதனில் 20.50 பூட்டியாக நெருப்பிட்ட தவறல்லால் பொல்லாங்கு நான்செய்ய வில்லையென்ருர், வீ. 6