பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கோட்டை சிதறவும் கொம்மை தகரவும் கொத்தாளம்" நெட்டு" இடிந்திடவும் நாட்டிலே மண்மாரி பெய்யக் கண்டேன் பாஞ்சை நாடுவிட்டோர் பெண்ணும் போகக் கண்டேன். கீழக்கோட்டை வாசலிலே அரைக் கீரைப்பாத்தியான தோட்டத்திலே வேளையிலே குண்டு தைக்கக் கண்டேன். அங்கே வீணுக உன் தலை போகக் கண்டேன் 2550 நயமுள்ள நம்ம தானுபதியையும் நாகலாதபுரத்தில் தூக்கக் கண்டேன். கயத்தாத்திலே கட்டப் புளியிலே கருத்தையா தலை துரங்கக் கண்டேன். பட்டத்தானை பட்டுப் போயிடவும் இந்த பாஞ்சை நகர மழிந்திடவும் புட்டுக்கு மண் சுமந்தாரறிய நானும் பொல்லாத சொப்பனங் கண்டேனென்ருள். காகங் கதறுதே என் கணவா கருங் குருவி " கட்டுதே என்கணவா 2560 போகாதே போகாதே என்கணவா நானும் பொல்லாத சொப்பனங் கண்டேனென்ருள். என்றந்தக் கன்னியுரைத்திடவே அய்யோ என்றவன் கையை நெறித்திடவே இன்றைக்கு உன்னை இழந்தே னென்ருளப்போ ஏது சொல்வான் பாதர் வெள்ளையனும், என் புத்தி கேட்பாரே கோடி லட்சம், நானும் பெண்புத்தி கேட்பேனே பாதர் வெள்ளை அன்புடன் அன்னங் கொடுத்தவர்க்கு இப்போ ஆபத்து வேளைக் குதவுதற்கு 2570 போக வேண்டாமென்று சொன்னதினுலிந்த லோகத்துக் கேற்குமோ பெண்ணரசே! ஆகாக் காலங்கள் வந்தாக்கால் இப்போ சாகாமல் தப்பவும் கூடாது சுத்த வீரனென்று பேரெடுத்து நம்மள் கர்த்தனைக் காட்டிக் கொடுக்கலாமா ? யுத்தகளத்துக்குப் போகா விட்டால் நமக்கு சுத்த வீரனென்று பேரேது ?