30
வீரர் உலகம்
நன்கு உணர்ந்த மன்னர்கள், பணிந்து வந்து திறை கொடுக்கும் பகையரசர்களை ஆதரித்துப் போரை நிறுத்தி விடுவார்கள். இது சிறந்த வீரம் என்றே போற்றுவதற்குரியது. திறை கொடுக்கும் அரசன் தன் நாடு வீணாக அழிந்து போகுமே என்ற கருணையினால் சரணடைகிறான். அந்தக் கருணை போரில் வென்றுவரும் அரசனுக்கும் இருக்கவேண்டும். பகைவர் நாடாக இருந்தாலும் அங்குள்ள மக்கள் வீணாக அழிவதை அவன் விரும்பமாட்டான்.
பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னனை அரிசில்கிழார் என்னும் புலவர் பத்துப் பாடல்கள் பாடிப் புகழ்ந்திருக்கிறார். பதிற்றுப்பத்தில் அப்பாடல்கள் உள்ளன. அவனுடைய வீரத்தையும் ஈகைச் சிறப்பையும் விரிவாக அந்தப் பாடல்களில் சொல்கிறார். ஒரு பாட்டில், பகைவர் திறை கொடுக்க அவன் போர் செய்யாமல் திரும்பியதைச் சொல்கிறார்.
பேய் மிடுக்குடன் வருகிறது; உயிரை உறிஞ்சுவேன் என்று வருகிறது. அதைக் கண்டவன் அதற்குரிய பலியை இடுகிறான். உடனே பேயின் சினம் ஆறுகிறது. அது பலியைப் பெற்றுக்கொண்டு மீண்டு போய்விடுகிறது. பேயே இத்தகைய கருணையைக் காட்டும்பொழுது அரசன் காட்டாமல் இருக்கலாமா? ‘நீ அத்தகைய பேய்போலத் திறையை ஏற்றுக்கொண்டு திரும்புகிறாய். உன்னிடம் இந்தக் கருணை இருப்பதனால் நீ நிறையாயுளுடன் வாழ வேண்டும். இவன் அறிவுடையவன், இவன் அறிவில்லாதவன் என்று நன்கு ஆராய்ந்து, இவ்வாறு நீ அருள் செய்யாமற் போனால் உலகத்தில் யார் வாழ்வார்கள்?’ என்று பாடுகிறார் புலவர்:
“மெய்பனி கூரா அணங்கெனப் பராவலின்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்