4. சிறந்த வீரம்
31
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் ஊழி!
உரவரும் மடவரும் அறிவு தெரிந் தெண்ணி
அறிந்தனை அருளா யாயின்
யார்இவண் நெடுந்தகை வாழு மோரே.”[1]
[பனிகூரா - நடுக்கம் மிக்கு. அணங்கு என - தெய்வம் என்று. பாசம் - பேய். பெயர்தி - மீள்கிறாய். ஊழி - நிறை ஆயுள். உரவர் - அறிவுடையோர். மடவர் - அறிவில்லார். நெடுந்தகை - உயர்ந்த குணங்களையுடைய அரசனே. வாழுமோர் - உயிருடன் வாழ்கிறவர்கள்.]
போரில் சோர்வுற்றவர்களோடு பொருவது அறப்போர் ஆகாது. ‘சிறப்புடை அரசியலாவன: மடிந்த உள்ளத்தோனையும், மகப் பெறாதோனையும், மயிர்குலைக் தோனையும், அடிபிறக்கிட்டோனையும், பெண்பெயரோனையும், படையிழந்தோனையும், ஒத்த படையெடாதோனையும், பிறவும் இத்தன்மை உடையோரையும் கொல்லாது விடுதலும், கூறிப் பொருதலும் முதலியனவாம்’ என்று சிறப்பான வீரத்துக்குரிய இலக்கணத்தை நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் எழுதுகிறார்.
புறம் காட்டினோர்மேல் படையை விடாமல் இருக்கும் துறைக்குத் தழிஞ்சி என்று பெயர். அந்த வீரத்தைக் கழிதறுகண்மை என்று கூறுவர்.
“அழிகுநர் புறக்கொடை அயில்வான் ஒச்சாக்
கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று”[2]
என்பது அத்துறையின் இலக்கணம், ‘தனக்குத் தோற்று ஓடுவார் முதுகின்மேல் கூர்மையையுடைய வாளை வீசாத மிக்க வீரத்தை விரும்பிச் சொல்லியது’ என்பது இதன்