பக்கம்:வீர காவியம்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

110
காதலரைக்கூடிமகிழ் பொழுதி லின்பம்
கடல்போலப் பெரிதாகும்; பிரிந்து விட்டால் வேதனையோ கடலைவிடப் பெரிதாய்த் தோன்றும்;
வீரரவர் என்ளுேடு பயிலும் போதும் போதனைய என்விழிகள் துயில வில்லை;
போர்புரியக் கருதியவர் பிரிந்து விட்டார் ஆதலிளுல் இன்றுமவை துயில வில்லை;
அன்றவைதாம் கண்டதின்பம்; இன்ருே துன்பம்! 213
ஊரெல்லாம் உறைபவரைத் துயிலப் பண்ணி, ஒருதனிமைக் கஞ்சிய இவ் விரவுப் போது பாரெல்லாம் தேடியொரு துணைகா ளு மல்
பாவையெனைத் துணையாகக் கொண்ட தேயோ? போரெல்லாம் வென்றவரென் னுடனு றைந்த
பொழுதெல்லாம் வெகுவிரைவில் இரவு செல்லும்; வேரெல்லாம் வீழ்த்ததுபோல் நிலையா யின்று
விடியாமல் நெடுநேரம் தங்கிக் கொல்லும். 214
உள்ளத்தால் உவந்தென்னை விழையா ராகி
உண்மைஎன நம்பும்வணம் சொல்லால் மட்டும் கள்ளத்தால் காதலித்த கள்வ ரைத் தான்
காணத்தான் போகத் தான் துடிக்கும் கண்ணை எள்ளத்தான் வெறுக்கத்தான் நினைவு தோன்றும்;
இருவிழியும் துயிலைத்தான் எய்தி நின்ருல் மெள்ளத்தான் வருங்கனவில் அவரைக் கண்டு
விளம்பிடுவேன் துயரைத் தான் துயிலே இல்லை. 215
வேர் வீழ்த்தல்-வேர் விடுதல், எள் ள-இ.கழ.