இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வீரகாவியம்
112
இயல் 49
ஆற்றுக என்றனள் ஆருயிர்த் தோழி; ஏற்றிலள் அவள்மொழி இரங்கினாள் வேல்விழி.
பொழுதனைத்தும் புலம்புகிற மங்கை நெஞ்சைப்
புரிந்தவளாம் தோழிவந்து, கருக்கொள் போழ்தில் அழுதிருத்தல், உணமறுத்தல், துயில்வெ றுத்தல்,
அழகாமோ? பிரிவுதரும் துயரந் தாங்கித் தொழுதிருத்தல் மங்கையர்க்குக் கடனே யன்ருே?
து.ாமொழிநீ சிறு மகவோ? மனத்தில் வைகும் பளுவகற்று! பாலகனை எண்ணி நின்றன்
பரிதவிப்பை விடுபேதாய்! எனக்க டிந்தாள். 219
'கலங்குகிற எனக்குறைகள் கூறு கின்ருய்! காதலியைக் கைவிட்டுப் பிரிந்து சென்று கலங்கும்வணம் செய்தானே அவனை நீதான்
கடுகளவும் குறைசொல்லிப் பழித்தா யல்லை! இலங்கிழையே! பரிவுடனே ஒருசொற் சொல்லி இனைவுறுமென் பாலருளித் துாது விட்டால் வலங்கெழுமும் வேழற்குக் குறைந்தா போகும்?
வஞ்சகற்கு வாயென்ன நொந்தா போகும்? 220
பளு-சுமை. இணைவுறும்-வருந்துகின்ற .