இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வீரகாவியம்
114
இயல் 50
வேழனைப் பழித்த தோழியை மறுத்து வேல்விழி புகழ்மொழி விளம்பினள் உருத்து
பொறுமையுடன் கேட்டிருந்த தோழி நெஞ்சுட்
புன்னகைத்து வேல்விழிக்குத் தகுந்த வண்ணம் மறுமொழிகள் புகல்வதுபோற் பொய்ம்மை யாக மாவேழன் இயல்பதனைப் பழித்து சைத்தாள்: "தறுகணன் பால் தண்ணளியும் இருக்கும் என்ருல்
தாவுமுயற் குட்டிக்கும் கொம்பி ருக்கும்; வெறியனவன் போருக்கே உரிய வைான்
விளங்கிழையார் காதலுக்குத் தகுதி யாகான். 222
தினவெடுத்த திண்டோளன்; கண்ணும் மண்ணும் தெரியாமற் சமர்விளக்கும் கூர்வாய் வாளன்; சினமடுத்த மடங்கலெனக் கூச்சல் செய்வான்
சிந்தையிலே மென்மைக்கோர் இடந்தான் உண்டோ? கனவகத்தும் மெல்லியல் நின் துயரங் காணுன்; கடுந்துயரக் கடலுக்குள் தள்ளி விட்டான்; புனமடுத்த களிறனையான் மனமே யில்லான்;
பொய்யனவன்' என அவனை இயற்ப ழித் தாள். 223