பக்கம்:வீர காவியம்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

138


கொண்டதொரு வஞ்சனையால் ஐயி ரண்டைக் கூடிவரும் ஆயிரமாம் வீரர் சூழ்ந்து மண்டுபெரும் படையொன்றைத் திரட்டித் தந்து மாவலியன் தடவலியன் என்பார்க் கூவித் 'தண்டுகொண்டு கோளரிக்குத் துணையாய் நின்று சமர்புரி'கென் றிருவர்க்கும் ஆணை யிட்டான்; தொண்டுபுரி படைத்தலைவ ரவரை நோக்கித் துணைபுரியச் செல்லுமவர்க் கொன்று சொல்வான். 274 'படைத்தலைமை கொண்டுள்ளிர்! வயந்தர் தந்த படைக்குரிய கோளரிதான் யாவன் என்று படைத்துணர வல்லிரோ? நமது நாட்டின் பகைவன்மா வேழனுக்கும் வயந்தன் பெற்ற இடைக்கொடியள் வேல்விழிக்கும் பிறந்த செல்வன்; இதுபிறர்க்கு மறைபொருளா வுள்ள தென்று கிடைத்துளது செய்தியொன்று; போரில் வேழக் கிழவனுக்கு நிகராவான் என்றும் சொல்வர். 275 நமதுபெரும் படைத்துணையும் இன்று பெற்ருன் நானிலத்தில் எவர் பொரினும் எளிதில் வெல்வான்; எமனனைய மாவேழன் வாழ்வால் தோல்வி ஏலாத மூவகத்தைத் தோற்கச் செய்வான்; சமர்புரியும் மதலைக்கு வேழன் போலத் தனிமதலை இவன் நமக்கு வாய்த்தான்; நல்ல சமயமிது; இவ்வமரில் நமக்கே வெற்றி சார்ந்துவிடும் ஐயமில திண்ணம் திண்ணம். 276 தண்டு-சேனை பொரினும்- போர்செய்தாலும் மதலைக்கு-மதலைக் கோமானுக்கு. i o