159
மகப்பெறு படலம்
இயல் 70
மறுநாள் கோட்டை வாயிலுட் புகுந்தோன் பொருவாள் விழிமகட் கண்டிலன் புலம்பினன்.
துயிலரசு செயுமிரவு புறந்தந் தோடத்
துதையிருளின் வாய்பிளந்து கதிரோன் தோன்ற அயிலரசின் இலைவேலான் படைதி ரட்டி
ஆர்ப்பரித்து வெண்கோட்டை வாயில் சார்ந்தான்; எயில்வளையும் நெடுங்கதவின் வாய்பி ளக்க
இடித்ததனுட் புலிபோலப் பாய்ந்து சென்ருன்; பயில்பு விங் கொருவருமே காணு கிைப்
பகரரிய ஏமாற்றங் கொண்டு நின்ருன். 3.18
காணுருங் கேளாருங் கூனர் தாமும்
கைகால்கள் முடமாகிச் செயல்செய் யாரும் பேணுர்தங் கோட்டைக்குள் இருக்கக் கண்டான் ;
பேருலையின் வெய்துயிர்த்தான்; வீரம் ஒன்றே பூணுகக் கொண்டவளைத் தனது நெஞ்சுட்
புக்கதனைக் கவர்ந்தவளைத் தேடித் தேடிக் காணுமல் பதைபதைத் தான்; ஏதோ ஒன்று
கவ்வியது போல்மனத்தில் துடிது டித்தான். 3.19
- - -- _
துதை-செறிந்த அயில்-கூரிய அரசின் இலை-அரசமரத்திலே . எயில்-மதில் பயில் வர்-வாழ்பவர். உலையின்-உலையைப்போல .