பக்கம்:வீர காவியம்.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

போர்ப் படலம்


இயல் 108 மூன்ரும் நாளும் முழுவலி யோடவர் ஏன்றுடன் பொருதனர் எதிரெதிர் நின்றே. கதிரோனும் மாவேழன் தானும் ஒன்ருய்க் கண்விழித்தார் புதுப்பொலிவு கொண்டு நின்ருர்; எதிராக வருவோர்தம் கண்கள் கூச என்றுமிலா எழிலோடு விளங்க நின்ருர்; முதிராத இளையோனும் முதியன் ருனும் மோதுபுலம் வந்தடைந்தார்; தன்னை முன்னுள் அதிராமல் பொய்ம்மைசொலி ஏய்த்த தெண் ணி அடலேறு மிகக்கனன்று நோக்கி நின்று, 437 'அணல்சுருளும் கதுப்புடையோய்! முதல்நாள் நின்றன் ஆற்றலிற்ருன் தளர்வுகண்டேன்; நெருநல் என்றுந் தனவரிய வாய்மையிலும் தளர்வு கண்டேன்; தகுமுறையில் புளுக இனி என்கொ ணர்ந்தாய்? குணமிலையால் உனையின்று கொல்வ தன்றிக் கொடுபோக உன்னுயிரை விடுதற் கொவ்வேன்; மணல்விழுந்த இருமுறையும் கொல்லா துன்பால் மறக்கருணை காட்டியது போதும்' என்ரு ன். 4.38 அதிராமல் - நடுங்காமல். அனல் - தாடி . கதுப்பு - கன்னம் . நெருதல் - நேற்று தன வரிய - நீங்காத .