பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வீர சுதந்திரம் கொடுத்து, வீரசுதந்திரத்தை நிலைகாட்டினர்கள். இந்திய சுதந்திரம் ஏதோ சும்மா வந்த சுக்குமிளகல்ல. ஏதோ சிலரது பேச்சால் வந்துவிட்ட சுதந்திரமல்ல. இது வீர விடுதலைஎன்பதை எவராவதுமறந்தால், அவர்கள் பரிதா பத்திற்குரியவர்கள் என்றுதான் வரலாறு தீர்ப்பளிக்கும்: ஒராயிரம் ஆண்டு போராயிரம் செய்து, நூருயிரம் உயிர்களைப்பலியிட்டுப் பெற்றது வீர சுதந்திரம் வெற்றி யின் சாசனம் இந்த விடுதலை வரலாற்றின் மகா காவி யத்தில் சில ஏடுகளை, சில வீரர்களைப் பற்றிக் கூறு வதே, இந்த நாடகத்தின் குறிக்கோள். சுதந்திரத்தின் அடிப்படையை அறிந்து கொள்ளா மலே, நாம் உரிமைகளைப்பற்றிப் பேசுகிருேம். கடமை களைப் பற்றிப்பேசவே கசக்கிறது நமக்கு. வீடு வாழ, காடு உயர வேலை செய்' என்ருல் கோபம் வருகிறது! உலகம் எக்கேடோ கெட்டுப் போகட்டும். நீ மட்டும் கன்ருகக் குடித்துவிட்டுப் படுத்துத் துரங்கிக் கொண்டே இரு' என்று எவனுவது சொன்னுல் அந்தப் பேச்சு இனிக் கிறது. அப்படிப் பேசுபவரின் திருவடிகளில் மலர்முடி சூட்டிவிட்டு, இனிமேல் நமக்கென்ன குறை; எல்லா வற்றையும் இந்தப் பேச்சுக் கடவுளே நிறைவேற்றி விடும், என்று துரங்கப் போய்விடுகிருேம். கட ைம க ளே ஆற்றும் கையாலாகாதவனுக்கு உரிமை வாழ்க்கையில்லை. தன் வீட்டையும் தன் மனைவி யையும் மற்ருெருவன் காப்பாற்றுவான்' என்று நினைக் கும் பேடி மகன் ஒருவனுக்கு, அந்த வீட்டில் என்ன மரி யாதை இருக்கும்? வங் த வ ன் போனவனுக்கெல்லாம் அந்த வீடும்; வீட்டில் இருப்பவர்களும், சொந்தமாகி, கா ள ைட வி ல் அடிமைகளாகி விடுவார்களல்லவா. அதைப்போல் 35i-65) is] செய்யும் ஆற்றலற்றவர்கள்: