பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 7 பெறுவதற்கு திலகர், வ.உ.சி. காந்தி, லஜபதி போன்ற மகான்களும், தாகூர், பாரதி போன்ற மகாகவிகளும் நேதாஜி, பகத்சிங், குமரன் வாஞ்சி போன்ற வீரப்பெருக் தகைகளும் தேவையில்லை. ஒருசில இராணுவ வீரர்களையோ, அல்லது ஒருசில வக்கீல் பேச்சாளிகளையோ கொண்டு, அத்தகைய அரை குறைச் சுதந்திரத்தை நாம் அடைந்திருக்க முடியும். வெள்ளையனுடன் ஒரு சமரச ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு, அவன் அமைத்த காமன்வெல்த்தில் கம் காட்டுப் படிப்பாளிகளும் சுகமாகப் பதவி வகித்துக் காலங்கழித்திருக்க முடியும் கேவலம் உத்யோக மாற்றங்களுக்கல்ல நமது விடுதலை. அதிகார மாற்றங் களுக்கல்ல அரசியல் சுதந்திரம் திருடர்களின் பதவி வெறிக்காக மட்டும் அல்ல வீரசுதந்திரம் இந்த நாடு இமயம்போல் உலகரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். தனக்கு மட்டுல்லாமல் தாரணிக்கே ஒரு நாகரிக அரணுக விளங்க வேண்டும். அதற்கேற்ற படி பாரதநாடு, முன்னைப் பழமைக்கும் முந்தும் பழமையதாய், பின்னைப் புதுமைக்கும் போர்த்துமப் பெற்றியதாய்' விளங்க வேண்டுமெனக் கனவு கண்டார்கள் பெரியோர்கள். அகிலத்தில் சமாதானம் நிலவ வேண்டும், அதற்கு இந்தியா உதவ முடியும் -அத்தகைய இந்தியா சுதந்திர மாகச் செயல்படும் உரிமை வேண்டும், அதற்காகவே, விடுதலை வேண்டுகிருேம், என்றுதான் வரலாறு போற்றும் நமது வீரத் தலைவர்கள், மகா கவிஞர்கள், மாவீரர்கள், வாலிபச் சிங்கங்கள் அனைவரும் தியா கத்தின் பலிபீடத்திலே தங்கள் உடல், பொருள், ஆவி, சொந்தம், பந்தம் சுகம் அத்தனையையும் பலிதானமாகக்