பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வீர சுதந்திரம் இத்தகைய உயர்ந்த ஞானிகளின் எண்ணங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று வாசகர்கள் நினைக்கலாம். என்ன செய்வது? வீர சுதந்திரத்திற்காக உயிர்விட்ட பெரியவர்கள் எல்லாம் பெரும் ஞானிகள். ஆதலால், இவர்களைப்பற்றி எண்ணம் வருவது இயற்கை மேலும் இந்தப் பொய்யா மொழிகளே, அடிக்கடி எண்ணுவதால், இன்று, சுதந்திரம் என்ற பெயரால் நடக்கும் பொய்யான தீமைகள் மறைய வழியுண்டு என்று தோன்றுகிறது. மேலும் நாடகம் என்ருல் ரசிகர்களே ஒருபடியாவது உயர்த்துவாதாக அமைதல் வேண்டும், என்பதும் ஆன்றேர் கருத்து. நாடகம் என்பது வெறும் கேளிக்கை கூத்து மட்டுமல்ல-மனதை உயர்த்தும் ஒரு மகாசக்தி அது நாடகத்தைப் பார்ப்பவரைவிட, காட கத்தில் பாத்திரமேற்று கடிக்கும் கலைஞர், மூன்றடி உயரத்தில், மேடையில் நின்று கடிப்பதன் அர்த்த மென்ன? பார்ப்பவர் எல்லோருக்கும் தன் நடிப்பின் ஆற்றல் தெரியவேண்டும் என்பது ஒன்று கடிகர்பேசும் பேச்சுக்கள் அரங்கத்தைப் போலவே கொஞ்சமாவது உயர்ந்ததாக அமைதல் வேண்டும், எ ன் பது மற்ருென்று அதனுல்தான் மிக உயர்ந்த செல்வமான, வீர விடுதலையின் சில சிறப்பான பகுதிகளை, இந்த நாட கத்தின் வாயிலாக அரங்கேற்றத் துணிந்தேன். காம் பெற்ற சுதந்திரம், ஏதோ வெள்ளைக்காரன் பார்த்த ஒரு சில உத்தியோகங்களே கம்ம ஆட்கள் சில பேர் கையில் ஒப்படைப்பதற்காக மாத்திரம் அல்ல. வெள்ளையனின் பிரித்தாளும் கொள்கையை வாங்கி நம்ம ஆட்களின் கையில் ஒப்படைக்கும் கீழ்த்தரமான தொரு அரசியல் சூழ்ச்சிக்காக வாங்கிய சுதந்திரமல்ல இது அத்தகைய கேவலமான சுயநலச் சுதந்திரத்தைப்