பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 101 வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு நம் உறுதியை சிதறவிடக்கூடாது. அமைதியோடு கடமைகளை ஆற்றவேண்டும். பாரதத் தாயே! உன்னையன்றி வேறு துணை எமக்கில்லை. சிறையிடப்பட்டுள்ள எமது தலைவர்களைக் காப்பாற்றி மீண்டும் எமக்கு அருளவேண்டும். இதுவே காங்கள் செய்யும் பிரார்த்தனை. சார்ஜண்ட் ; ஏ, முட்டாள்களே! உயிர் வேணும்னு உடனே எழுந்து ஓடிடுங்க. ஜெனரல் டயர்துரை வந்து கொண்டிருக்கிருர், தலைவர் : பொறுங்கள். பிரார்த்தனை முடிந்ததும் போய் விடுவோம். சார்ஜண்ட் : எதுக்குப் பிரார்த்தனை? சாகறத்துக்கா? போங்க மேன். ஒடிப் பொளேச்சுக்கோ. கூட்டம் போடக்கூடாது. அது சட்ட விரோதம். பேசினு சுட்டுத் தள்ளிபுடுவோம. இது இராணுவச்சட்டம் தலைவர் : பொறுங்கள். (ஜெனரல் டயர் வருகிரு.ர்.) டயர் : வாட் மேன்? வாட் இஸ் தி மேட்டர்: டோன்ட் டாக் டு திஸ் பிளாக் டாக்ஸ். Black dogs ஏய், லுக் ஹறியர். ஐ ஆம் இன்சார்ஜ் ஆப் தி சிட்டி கர்ப்யூ ஆர்டர் யூ பிளடி சேப்ஸ் கெட் அவே, குயிக். தலைவர் : ஜெனரல் என்ன இது? நாங்கள் மனிதர்கள். இது புரட்சிக்கூட்டம் அல்ல, பிரார்த்தனைக்கூட்டம் டயர் : வாட் பிரேயர் யூ மீன் காட்...காட். உங்களுக் கில்லை. அது எங்கப் பக்கம் மேன். உங்க கடவுள் சட்டத்தை மீறச் சொல்லுதா? சட்டத்தை மீறினு